பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

கலைவாணன்

38 கலைவாணன்

தாங்களும் தங்கள் நாட்டு மக்களும் மன்னரும் செளக்கியந்தான்ே?

கூத்தர்:- ஆம்; இங்கும் அப்படியே எல்லோரும்!......

பாண்டியன்:- ஆம்; தங்களைப் போன்ற பெரியோர்களின்

ஆசியால் எல்லோரும் செளக்கியமே.

கூத்தர். இப்போது தங்கள் அரசவைப் புலவர் தலைமைப்

பதவியை அலங்கரிப்பவர்.....?

பாண்டியன்:- இதோ! இவர்தான்். இவரைப்பற்றி நீங்கள்

கேள்விப்பட்டிருக்கலாமே!

கூத்தர்:- (சற்று யோசித்து) உம்; பெயரென்ன? புகழேந்தி. என்னைப் புகழேந்தியென்று சொல்லுவார்கள்.

மதிவாணர்:- என்ன! இவரைத் தெரியாதவர்கள் தமிழ்

நாட்டிலேயே இருக்கமுடியாதே!

கூத்தர். உ.ம். ஆமாம்; எப்பொழுதோ எங்கோ யாரோ சொல்லக் கேட்டதாகத்தான்் ஞாபகம். மறந்து

விட்டேன். உம்; அதிருக்கட்டும். நான் வந்த காரியம் வேறு. பாண்டியன். புலவரே! தாங்கள் வந்த காரியத்தைச் சொன்னால், என்னால் முடிந்ததைச் செய்யத் தடையில்லை. கூத்தர்:- முடிந்ததைச் செய்வதென்ன! காரியத்திற்குப்

பூரண பொறுப்பாளரே தாங்கள் தான்ே! .

மதிவாணர்:- விஷயம்; இன்னதென்று சொன்னால் தான்ே

புரியும்,