பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

கலைவாணன்

குமுதம்:- நல்ல கற்பனை உலகமம்மா இது இப்படியே அவர் கற்பனை உலகிலும் நீ காதல் உலகிலும் சஞ்சரித்துக் கொண்டிருந்தால் நான் எந்த உலகில் சஞ்சரிப்பதென்பதுதான் எனக்குப் புரியவில்லை. நீ சொல்வது போல் புலவர் கற்பனை உலகிலோ சொப்பன உலகிலோ இருப்பதாகத் தெரியவில்லை. சதா கவலை உலகில்தான் இருக்கிறார்.

குணவதி:- என்ன! கவலையா? புலவருக்கா?

குமுதம்:- ஆமாம்; அவர் யாரிடமும் எதையும் சொல்லுவதில்லை. பல முறை வருந்தி அழைத்தும் கூட அவர் அந்தப்புரத்திற்கு ஏனோ வருவதில்லை. நீயும் அவர் விஷயத்தில்......!

குணவதி:- அவர் கவலைக்குக் காரணம்?

குமுதம்:- கூத்தர்தான்.

குணவதி:- கூத்தரா!

குமுதம்:- ஆமாம். கூத்தரின் பொறாமைக்குப் பலியான புலவர்கள் கணக்கற்றவர்களாம். இன்னும் இன்றும் கூடச் சிறையில் சித்திரவதைப்படும் புலவர்கள் எத்தனையோ பேராம். இவ்விஷயத்தில் மகாராஜாவும் கூத்தரின் கைப்பாவையாயிருக்கிறாராம். நமது புலவரின் கவலைக்கும் அதிருப்திக்கும் இதுதான் காரணம.

குணவதி:- சரி; அதோ மகாராஜாவும் வருகிறார். இதைப் பற்றி நான் அவரிடமே கேட்கிறேன். நீ சற்று மறைவாயிரு.

குமுதம்:- அப்படியே.