பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

கலைவாணன்


உயிரையும் போக்கிக் கொண்ட கோப்பெருந்தேவியும்,

சந்தேகத்தால் ஒரு அந்தணன் வீட்டுக் கதவையிடித்த குற்றத்திற்காகத் தன் கையைத் தான்ே வெட்டிக் கொண்ட பொற்கைப் பாண்டியனும் தோன்றிய மரபில் தான்் நானும் தோன்றினேன். உயிரினும் நீதியே எனக்குச் சிறந்தது. இதை இன்று அரசரிடமே நேரில் சொல்லவேண்டு மென்றிருந்தேன். முடியவில்லை. புகழேந்தியைக் கூத்தர் புலமையில் வெல்ல முடியா தென்பதை நானறிவேன். என்றாலும் கூத்தரின் சொல்லுக்குக் தக்கபடி கூத்தாடும் மன்னர் சரியான நியாயம் வழங்குவாரென்று நினைப்பதற்கில்லை. அரசரின் அநீதத் தீர்ப்பால் பெருந் தமிழ்ப் புலவருக்கு ஏதேனும் விபரீதம் நேர்ந்தால் அக்கணமே இந்நாட்டு அரசியையும் இழந்து விட்டீரென்று உமது அரசரிடம் தெரிவித்துவிடும். இதைச் சொல்லவே உம்மை இங்கு அழைத்து வரச் சொன்னேன். இனி நீங்கள் போகலாம்.

உதயணர்:- தேவி! இதென்ன விபரீத முடிவு. அரசர்

கூத்தரின் கைப்பாவையாக இருப்பது உண்மையே! ஆனாலும் சிறந்த கலா ரஸிகரும் அறிஞருமாகிய அவர் புகழேந்திப் புலவரின் உயிருக்கு எவ்விதத் தீங்கும் இழைக்கத் துணியார். தாங்கள் அவசரப்பட்டுத் தவறான காரியம் எதுவும் செய்துவிடாதீர்கள். இன்று காலையில்கூட மன்னர் புகழேந்திக்குப் பரிந்து கூத்தரிடம் நெடுநேரம் விவாதித்தார்.

குணவதி:- ஆமாம். புகழேந்தியை இத்தனை நாளாகச்

சிறையிட்டிருப்பதிலிருந்தே தெரியவில்லையா அரசரின் அனுதாபம். உதயணரே! அதிக நேரமாகிவிட்டது. வீண் காலதாமதமும் போலி சமாதான்மும் வேண்டாம். இது என் கட்டளை யென்று மன்னரிடம் சொல்லுங்கள்'