பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைவாணன்

97


யாரிங்கே இங்கே ஒருவருமில்லையா? குணவதி!குமுதா!-குணவதி!

(கதவைத் தட்டுகிறான்.)

என்ன! பதிலையே காணோம்!.குணவதி குணவதி!

(மீண்டும் கதவைத் தட்டுகிறான்.) என்ன ஆச்சர்யம்! நூற்றுக் கணக்கான பணியாளர்கள் நடமாடிக்கொண்டிருக்கும் இம்மாளிகை மனிதவர்க்கமே இல்லாத பிலத்துவாரம் போல் சலனமற்றிருக்கிறதே!

(மீண்டும் ஆவேசத்துடன் கதவை உதைக்கிறான்.) குணவதி குணவதி!......? குணவதிக்கு என்மீதில் ஏதேனும் கோபமாய் இருக்குமோ?...ஆம்; ஆம்; அப்படித் தான்் இருக்கவேண்டும். அப்படி ஒன்றும் அவள் மனம் நோக நான் நடந்ததில்லையே......! அப்படியே அரசிக்கு என்மீது கோபமிருந்தாலும் இங்குள்ள மற்றப் பணிப் பெண்கள் கூடவா என் கூப்பாட்டை அசட்டை செய்வார்கள்? முடி மன்னர்க ளெல்லாம் நடுங்கி அடிபணிந்து திரைப் பொருள் அளக்க அரசாட்சி செய்யும் குலோத்துங்கனுக்கா தன் அந்தப்புரத்திலேயே அவமதிப்பு? (பெருமூச்சுவிட்டு) உம்; இருக்கட்டும். அரச முறைப்படி நமது அரசவைப் புலவரையே அழைத்து அரசியின் ஊடலைத் தீர்க்க ஏற்பாடு செய்வோம்.

(அங்குள்ள மணியை அடிக்கிறான். ஒரு காவலன் வருகிறான்)

ஒடு சீக்கிரம்.

(காவலன் ஓடுகிறான்.) டேய்! டேய் இங்கே வாடா!

காவலன்:- (திரும்பி வந்து) Tir67 உத்தரவோ?

குலோத்:- எங்கேயடா ஒடுகிறாய்? மடையா!

காவலன்:- நீங்கள்தான்ே மகாராஜா ஒடச்சொன்னீர்கள்.

க-7