பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



செளந்தர ராகவனும், சீதாவும், சூரியாவும் ஆக்ராவுக்குத் தாஜ்மஹால் பார்க்கச் சென்ற பொழுது அங்கே செளந்தர ராகவனின் பழைய தோழியாகிய தாரிணியின் சந்திப்பு கிட்டுகிறது. தாரிணியும் சூரியாவும் நட்புரிமை கொண்டாடுகிறர்கள். ரஜனியூர் ஏரியில் படகிலிருந்து விழுந்து தத்தளித்து, இனம் புரியாத அலை ஓசையின் மருட்சியில் ஊசலாடிய சீதாவைத் தாரிணி காப்பாற்றினாள்.

சீதா இளமையில் பம்பாயில் வாழ்ந்த காலத்தில், ரஸியா பேகம் என்னும் பெண் ஒருத்தி மர்மமாக வந்து, அவளுக்கு ஒர் இரத்தின மாலையும் பணமும் கொடுத்துவிட்டுப் போனாள். அதே பெண் புதுடில்லியில் ஓர் இரவு ரத்தம் தோய்ந்த கத்தியுடன் வந்து சீதாவின் இல்லத்தில் ஒளிந்துகொண்டாள். அவள் தான் தாரிணியின் வளர்ப்புத்தாய் என்று சீதா அறிந்தாள்.

சூரியாவும் தாரிணியும் அன்புகொண்டிருப்பது கண்டு, செளந்தர ராகவனின் மனத்திடை பொருமைத் தீ கொழுந்துவிட்டு எரிகிறது.

ராகவன் தன் காதலை தாரிணியிடம் வெளியிட்டான்; அவள் அதனை உறுதியாக மறுத்துவிலக்கினாள்.

1942ஆம் ஆண்டு ஆகஸ்டுப் புரட்சி இயக்கத்தில் சூர்யா பிணைகிறான். இரகசியப் போலீஸ்

10