பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாடி, பக்தி சேர்த்த பாவனையைப் பாட்டின்மூலம் வெளிப்படுத்திக்கொண்ட கனிச்சாறு இது.

“குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டிலின்மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய்திறவாய்!”

“ஆண்டாள், இது என்ன விகாரமான பாட்டு? நிறுத்து, நிறுத்து...” என உத்தரவு போடுகிறாள் சிந்தாഥணி.

சபாஷ்!
சிந்தாமணி கெட்டிக்காரி!
***

சிந்தாமணி கெட்டிக்காரியா? யார் சொன்னர்கள்? நான்தான் சொன்னேன். ஏன்? அவள் விகாரமான பாட்டைப் பகுத்து அறிந்த பக்குவத்தைக் கண்டு மகிழ்ந்து கெட்டிக்காரி என்று சொன்னேன்.

ஆனால் நடந்தது என்ன?
நடந்தது ஒன்று.
நினைத்தது ஒன்று.

இந்த ‘ஒன்றும் ஒன்றும்’ ஒட்டுறவு சேர்க்கும் கதை இருக்கட்டும். முதலில் கதையைத் திருவாய் மலர்ந்தருளலாமா?

ஆகா!

சிந்தாமணியின் புகைப்படத்தைக் கண்டதுமே ‘பூந்தோட்டம் கண்ட பொன்வண்டானான்’ அழகப்பன்.

146