பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வய்யர், பத்மலோசன சாஸ்திரி, பங்காரு நாயுடு, சரஸ்வதி அம்மாள், துரைசாமி, ராஜம்மாள் போன்ற துணைப் பாத்திரங்களின் துணையுடன் தாரிணியும் சீதாவும் ராகவனும் சூரியாவும் நம் நெஞ்சில் நிலைத்துவிட்ட அதிசயத்தைச் சொல்லச் சொற்கள் எங்கே?


கல்கியின் தனித்துவம் பேசுகிறது!

டிமை மண்ணில் தொடங்கிய கதை சுதந்தரக் கொடியின் சூழலில் முடிந்து, கொடிகட்டிப் பறக்கிறது.

பெண் விடுதலை, வர்ணாஸ்ரமதர்மம், ஈ. வெ. ரா.வின் நாத்திகப் பேச்சு, வேவல்துரையின் திட்டம், ஹிட்லர் முஸோலினி ஆகியவர்களின் போர்வெறி, வகுப்புவாதக் கலவரம், காந்தி அண்ணலின் ஆத்மசக்தி, நேதாஜியின் புரட்சித் திருப்பம்-இப்படி இன்னும் எவ்வளவோ விஷயங்களை மிகத் தெளிவாகச் சொல்கிறார் ஆசிரியர்.

‘அலைஓசை’யில் விரவிக்கிடக்கின்ற வரலாற்று நிகழ்வுகளுக்குக் கணக்கு வழக்கில்லை!

அவர் இன்று இருந்திருக்கவேண்டும் சூ-என்-லாயை வில்லனாக்கி பெரிய நவீனம் ஒன்றைச் சமைத்திருப்பார்! வானவெளிப்பெண் வாலண்டினாவும் அழகி கீலரும்கூட தப்பித்திருக்க மாட்டார்கள்!...

“புதினத்தின் ஆசிரியன், வாசகனைத் திருப்திப் படுத்துவதையே முக்கியமான குறிக்கோளாகக் கொள்ள வேண்டும்.’’ என்பது ஸாமர்ஸ்ஸெட்மாமின் (Somarset Maugham) கொள்கை.

41

அ-3.