பக்கம்:கல்யாணம் இன்பம் கொடுப்பதா-இன்பத்தைக் கெடுப்பதா.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 கல்யாணம்

  இன்பம் கொடுப்பதா?
  இன்பத்தைக் கெடுப்பதா?
 கல்யாணம் வாழ்வின் முக்கிய மலர்ச்சி. ஆணும் பெண்ணும் வாழ்க்கைப் பாதையில் ஜோடி சேர்ந்து போக இணைக்கப்படும் சந்தர்ப்பம்.
 ஒரு ஆணுக்கு ஒரு பெண். அவர்கள் வாழ்வு முழுதும் சேர்ந்து வாழ்வதற்காக இணைத்து விடுவது மங்கல விழாவாகக் கருதப்படுகிறது. ஏன்?
 வாழ்க்கைச் சந்தையிலே இந்தப் பெண்ணை இவன் தன் உரிமையாக, உடமையாகப் பெற்றுக் கொண்டிருக்கிறான் என்று விளம்பரப்படுத்துவதற்காகத் தான்.
 பார்க்கப் போனால்,கல்யாணம் என்பது ஆண் பெண் கூட்டு வியாபாரம் தான். அதன் விளம்பரமே கல்யாணச் சடங்குகள், ஊர்வலங்கள் எல்லாம். பெரிய பிஸினஸ்மேன் பெரிய பெரிய விளம்பரங்கள் செய்கிறான்.சாதாரணப் பேர்வழி 'ஸிம்ப்ளா' முடிக்கிறான். இந்த வியாபார நியதி கல்யாணத்துக்கும் ஏற்கும். 
 “அவள் அவனது உடமை. அவன் அவளுக்குச் சொந்தம். ஏ கல்யாணமாகாதவர்களே! பொது வாக எல்லோருமே அறிந்து கொள்ளுங்கள். இனி அவன் மீதோ அவள் பேரிலோ வலை வீசாதீர்கள்! என்று எச்சரிப்பது தான் கல்யாண விழா, ஊர்வலம், எல்லாமே!