பக்கம்:கல்யாணராமனும் பரசுராமனும்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 நூலாசிரியரைப் பற்றி 74 கடுமையான போலிஸ் அடக்கு முறைக்கும் சித்திரவதைக்கும் கொடுமையான சிறைவாசத்திற்கும் உட்பட்டு மதுரை, சேலம் சிறைகளில் கடும் தண்டனை அனுபவித்து தியாகத் தழும்புகள் ஏறியவர். இலக்கிய அனுபவம் திரு. அ. சீனிவாசன் ஏற்கனவே தனது குழந்தைப் பிராயத்திலிருந்தே தனது தாய் தந்தையர் மூலம் இராமாயணம், மகாபாரதம் நாலாயிரத் திவ்யப் பிரபந்தம், நளவெண்பா, இராமனுஜருடைய தத்துவங்கள் முதலியவை பற்றி அறிமுகமானவர். விடுதலை இயக்கத்தின் ஆதர்சத்தில் பள்ளிப் படிப்புகாலத்தில், மகாகவி பாரதியார், வ.உ. சிதம்பரம் பிள்ளை, சுப்ரமணிய சிவா, விவேகானந்தர் நூல்கள், அவர்களைப் பற்றிய செய்திகள், ஆனந்த மடம் முதலிய பங்கிம் சந்திரர், மற்றும் சரத் சந்திரர் நாவல்கள், கல்கி நாவல்கள், மணிக் கொடி கதைகள் முதலிய இலக்கியங்களிலும் அறிமுகமாகி நாட்டுப்பற்றை வளர்த்துக் கொண்டவர். சுதந்திரப் போராட்ட காலத்தில் தீவிர வாதக் கருத்துக்களுக்கு ஆதரவான சிந்தனைப் போக்குகளைக் கொண்டிருந்தார். பாரதி, விவேகானந்தர், ஆகியோரின் இந்திய சிந்தனைப் போக்கு அவரை மிகவும் கவர்ந்தது. அதன் பெருமி தத்தை படிப்படியாக வளர்த்துக் கொண்டிருந்தார். திரு. அ. சீனிவாசன், இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்துடன் தொடர்பு ஏற்பட்டபோது கம்யூனிஸ்ட் இலக்கியங்களையும் குறிப்பாக மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின் மற்றும் சீனக் கம்யூனிஸ்ட் தலைவர்களின் மூல நூல்களை ஆழ்ந்து படித்தார். அப்போது, இயற்கை, சமுதாயம் தனி மனித சிந்தனை பற்றியும் அதன் வழியில் தத்துவ ஞானம், அரசியல் பொருளாதாரம் சமுதாய வரலாறு பற்றியுமான ஐரோப்பிய சிந்தனைகள், ஐரோப்பாவில் நிகழ்ந்த தீவிரமான கருத்துப் போராட்டங்கள், தொழில் புரட்சி மூலம் நிகழ்ந்த சமுதாய மாற்றங்கள் முதலியவை பற்றிய இலக்கியங்கள் மூலம் ஐரோப்பிய சிந்தனை வளர்ச்சி பற்றிய அறிமுகம் ஏற்பட்டது.