பக்கம்:கல்விச் செல்வம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

வண்ணக்களஞ்சியம்



பள்ளிக்கூடங்களே மக்கள் ஆட்சி முறையில் அமையும் கோட்டைக் கொத்தளங்கள். -ஓரசு மான்.

மற்றெல்லாப் படிப்புகளைவிட, மனிதன் எப்படி இருக்க வேண்டும், அவன் எப்படி வாழ வேண்டும் என்பது மிகச் சிறந்தது; உயர்நோக்கமுள்ளது. அத்துடன் அது, மற்றெல்லா படிப்புகளையும் விட முக்கியமானது; அதில் நாம் போதிய கவனம் செலுத்த வேண்டும்.


உடலுக்கும் உள்ளத்திற்கும் வேண்டிய எல்லாவித அழகையும் திறமைக்கு ஏற்றவாருள்ள அனைத்து ஒழுங்குகளையும் தருவதுதான் ஒரு நல்ல கல்விக் கொள்கையாகும்.


பிளேட்டோ

ஒவ்வொரு தனியாள் வாழ்க்கையையும் இன்பமுடையதாயும் நன்மையுடையதாயும் மாற்றியமைக்க வேண்டும் என்ற அடிப்படையில் கல்வி அமைதல்வேண்டும்.

-பெஸ்டலசி

கல்விக்கு முதலிடம் தருவதே மற்றெல்லா வேலைகளுக்கும் முதலிடம் தருவதாகும்.

-கியூமென்

அமைதியிலும், நெருக்கடியிலும் தனக்குரிய பணிகளையும் பொதுப்பணிகளையும் நீதி வழுவாமலும் அறிவாற்றலோடும் பரந்த உள்ளத்தோடும் செய்விக்க உதவுவதே முழுக் கல்விப்பயன்.

-சான் மில்டன்

கல்வி என்பது இயற்கை நியதிகளின் அறிவாற்றலைப் பற்றிய போதனை,

என்றி எக்சிலி