பக்கம்:கல்வியும் அரசாங்கமும், அண்ணாதுரை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4


இங்கு நடைபெற்ற பாராளுமன்றத்தைப்போல எங்கள் நாட்டிலும் ஒரு பாராளுமன்றம் உண்டு. இங்கு பாராளுமன்றத்தில் நீங்கள் பேசியது போல எங்கள் பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் பேசுவதுகிடையாது. உறுப்பினர்கள் பேசும்போது பெரும்பாலோர் தூங்கும் உரிமையை எங்கள் பாராளுமன்றம் பெற்றிருக்கிறது.

நான் சர்க்கார் தொடர்பு கொண்டவனல்ல. மக்கள் மன்றத்திலே உலவுகின்றவன் என்ற முறையில் சர்க்காருக்கு யோசனை சொல்லமுடியும். சர்க்காருக்கு யோசனை சொல்லவேண்டு மென்பதற்காகவே என்னை நீங்கள் அன்போடு அழைத்திருக்கிறீர்கள். நம் நாட்டிலே நூற்றுக்கணக்கானவர்கள் கல்வி அறிவு இல்லாதவர்கள். நீங்கள் எடுத்துக் கொண்டபொருள் மிகவும் முக்கியமான பொருள், கல்வி நிலையங்களை அரசாங்கம் ஏற்று நடத்தலாமா? என்பது பற்றி நீண்ட நேரம் விவாதித்தீர்கள்.

எங்கள் நாட்டில் கல்வி நிலையங்களையார் ஏற்று நடத்துவது? என்பதல்ல பிரச்னை, அரசாங்கத்தை யார் பொறுப்பு ஏற்று நடத்துவது என்ற பிரச்னைதான். கல்வி நிலையங்களை ஏற்று நடத்துவதால் ஆகும் பெரிய பணச்செலவைப்பற்றி எதிர்க்கட்சியினர் இங்கு நன்கு விளக்கவில்லை அரசாங்கத்தார் கல்வி நிலையங்களை ஏற்று நடத்தினால் பெரிய லாபம் கிடைக்குமா என்பதைத்தான் யோசிப்பார்கள். கல்வி நிலையங்களை ஏற்று நடத்துவதால் பெருத்த லாபம் கிடைக்கும் என்று சர்க்காருக்குத் தெரிந்தால் சர்க்கார் அதை தாரளமாக ஏற்று நடத்துவார்கள். அதிலே இருக்கிற லாபத்தைப்பெற சர்க்கார் ஒரு ஏஜண்டைக்கூட நியமிக்குமே. உங்கள் நாட்டிலே கல்வி நிலையங்களை அரசாங்கத்தார் பொறுப்பு ஏற்று