பக்கம்:கல்வி உளவியல்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 கல்வி உளவியல் யெல்லாம் இச்சிறு நூலில் சுருக்கியுரைத்தல் என்பது இயலாதசெயல். எனினும், வளர்ச்சிக்கு அடிப்பட்ையாக இருக்கும் ஒரு சில சிறப் பியல்புகளை ஆசிரியர்கள் அறிந்து கொள்ளுதல் சாலப் பயன் தரும். (1) ஓர் உயிரியின் வளர்ச்சி அதன் குடிவழி' குழ்நிலை' ஆகிய இரண்டும் இடையருது இடைவினை' இயற்றுவதன் விளைவினல் ஏற்படுவதாகும் : குடிவழி என்பது பிறவியிலேயே உயிரிக்குக் கிடைத்த இயற்கை ஆற்றல்’’. சூழ்நிலை என்பது பள்ளியிலும் வெளியிலும் குழந் தைக்குக் கிடைக்கும் அனுபவங்கள்; ஆசிரியர், பெற்ருேர், மற்ருேர் அளிக்கும் ஊக்கம், குழந்தைக்குக் கிடைக்கும் வெற்றி தோல்விகள் -ஆகியவை அனைத்தும் அடங்கியதொரு நிலை. இவற்றுள் ஒன்றில்லா மல் பிறிதொன்ருல் மட்டிலும் வளர்ச்சி ஏற்படமுடியாது. இஃது என். போலவோ எனின், விதையும் மண்ணும் இணங்குவது போல என்க. விதையின்றி மண், செடியை உண்டாக்கமுடியாது; அங்ங்னமே மண் ணின்றி விதை வளராது. - (2) வளர்ச்சி அளவிலும் பண்பிலும் நடைபெறுகின்றது : வளர்ச்சியில் இரு கூறுகள் அடங்கியுள்ளன. ஒன்று, அளவில் (பரும னிலும் மனத்திலும்) ஏற்படும் மிகுதியைக் குறிப்பது. (எ.டு., மூளைபெரி தாகிறது ; கனம் பெறுகிறது. அங்ங்னமே தசைகளும் பெரிதாகிக் கனம் பெறுகின்றன. மற்றென்று, தன்மை மாறுபாட்டைக் குறிப்பது. (எ-டு). பிறக்கும்பொழுதே குழந்தையின் மூளை பல்லாயிர உயிரணுக் களைக் கொண்டது. இவை பெரியவையாக வளர்கின்றன. ஆயினும், இவ் வணுக்களில் சில வேதியல் மாற்றங்களும்’ நிகழ்கின்றன ; நரம்புக் கம்பிகள் உறைகளால் மூடப்பெறுகின்றன. குழந்தையின் செரிமானப் பாதையிலும் இவ்வித மாற்றங்கள் ஏற்படுகின்றன. அது வளர்வதுடன் அமைப்பிலும் மாறுகின்றது. இதனுல்தான் வளர்ச்சிக்கேற்றபடி பல்வேறு வித உணவுகளைச் செரிக்க முடிகிறது. இந்த இரண்டாவது கூறு துலக்கம்' என வழங்கப்பெறும். குழந்தை வளரவளர, தலையின் வீதம் குறைவதையும், தசைகளின் வீதம் அதிகரிப்பதையும் காணலாம். இவை யாவும் துலக்கத்தைக் குறிப்பவை. (3) வளர்ச்சி இடையருது தொடர்ந்து மெதுவாக நடைபெறு கின்றது: எல்லாக் குழந்தைகளுக்கும் ஒழுங்கான வளர்ச்சிக்கோலங் 17 goals – heredity. 18 &g flā) - environment. 19% sol-såår - interaction. 29 நான்காம் அத்தியாயத்தில் காண்க. 21 தன்மை மாறுபாடு - change in quality. * * $sušlusò lo srppio - chemical change. *s goéâû - development,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/101&oldid=777699" இலிருந்து மீள்விக்கப்பட்டது