பக்கம்:கல்வி உளவியல்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 கல்வி உளவியல் கிலேயால் தீர்மானிக்கப்பெறுகின்றன. வளர்ச்சியை இடையருத தொடர்பு என்று மேலே கூறிளுேம் அல்லவா ? கருவுலகில் ஒன்பதுதிங்கள் வரை ஓர் உயிரணுவிலிருந்து ஏறக்குறைய எட்டு இராத்தல் எடையுள் னதும், 20 அங்குல நீளமுள்ளதுமான குழந்தை வளர்கின்றது. கருவறை யில் இருந்ததனைவிட, பிறக்கும்பொழுது உயிரணுவின் எண்ணிக்கை அரைக்கோடி மடங்கு மிகுதியாகிவிடுகிறதாகக் கணக்கிட்டுள்ளனர். பொதுவாகக் கூறுமிடத்து, ஆண் குழந்தை பெண் குழந்திையை விடச் சற்று உயரமாகவும் கனமாகவும் இருக்கும். பிறந்தவுடன் குழந்தை உள்ளிருக்கும் வாழ்க்கைத் தேவைகள் பற்றி இடைவிடாது செயல்புரியும் ; சில நாட்களில் வெளித் தூண்டல்களும் துலங்கத் தொடங்குகின்றன. நாளடைவில் குழந்தை உயரத்திலும் எடையிலும் மிக்கு வருவதைக் காணலாம். உடலின் பல உறுப்புக்கள் வெவ்வேறு வேகத்தில் வளர்கின்றன. இதனால் குழந்தையின் நடத்தை பாதிக்கப் பெறுகின்றது. வளர்ச்சி குழந்தைக்குக் குழந்தை மாறுவது இயல்பாயினும், சில பொதுவான தகவல்களைக் குறிப்பிடலாம். தொடக்கத்தில் வளர்ச்சி மிக அதிகமாக இருக்கின்றது; இரண்டாவது ஆண்டுவரை இவ்வாறு விரைவாக இருக்கும். 11-ஆம் ஆண்டுவரை வளர்ச்சி வீதம் சற்றுக் குறைவாகவே இருக்கும். ஆனால், இளங்குமரப் பருவத்தில் (11-14) வளர்ச்சிவேகம் மீண்டும் அதிகரிக்கின்றது. குழந்தைப் பருவத்தில் உள்ள அளவுபோல் வளர்ச்சிவேகம் இப் பருவத்தில் இல்லை. உயரமாக வளரும்பொழுது சுற்றுவளர்ச்சியில் குறைந்தும், சுற்றுவளர்ச்சி மிகும் பொழுது உயரும் வளர்ச்சி குறைந்தும் வருவதை நாம் காணலாம். உருவத்தில் வளர்ச்சிக்கோல மாறுபாடுகள் : வளர்ச்சிக்கோலம் ஒவ்வொரு குழந்தைக்கும் வேறுபட்டதாக இருக்கும். எனினும், சில பொதுப் பண்புகளைப் குறிப்பிடலாம். உடலின் பல பாகங்களிலும் வளர்ச் சிக் கோலம் மாறுபடுகின்றது. (எ-டு) பிறந்தபின் கைகால் வளர்ச்சி தலை யின் வளர்ச்சியைக் காட்டிலும் அதிகம். அதனுல்தான் உடலின் ஒவ் வோர் உறுப்பும் வெவ்வேறு வீதத்தில் வளர்ந்து வருகின்றது என்று அறி கிருேம். ஒரு சில பகுதிகள் முற்றிய கிலேயில் இருக்கத்தக்க அளவினை ஏறக்குறைய குழவி நிலையிலேயே எட்டிப்பார்க்கின்றன. ஏனைய உறுப்புக் கள் வயதிற்கு ஏற்றவாறு அளவில் மாறிவருகின்றன. குழந்தை-முதியவர் ஒப்பு : குழந்தையின் உடலுறுப்புக்களின் அளவு விகிதங்களுக்கும் முதிர்ந்தவரின் உறுப்புக்களின் அளவு விகிதங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/107&oldid=777713" இலிருந்து மீள்விக்கப்பட்டது