பக்கம்:கல்வி உளவியல்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 கல்வி உளவியல் யிருக்கும் அறையைக் கவனித்தலும், பிரச்சினை தீர்ந்ததும் நாம் என்ன செய்யவேண்டும் என்ற நினைவுகள் எழுதலும், அண்மையில் கேள்வியுற்ற கவர்ச்சிகரமான செய்திகளை கினைந்துபார்த்தலுமான சமயங்களும் உள்ளன என்பதை நன்கு அறிவோம். ஒரு பொருளை நீண்ட காலம் கவனித்தல் என்ருல், மீட்டும் மீட்டும் அதனைக் கவனித்தல் என்பதே. அப்பொருளின் பல கூறுகளைக் கவனிக்கின்ருேம். அதைப்பற்றிப் பல விளுக்கள் நம் சிந்தையில் எழு கின்றன; அவற்றிற்கு விடை தேடுகின்ருேம். பயிற்றலில் சிறந்த ஆசிரியர்கள் குழந்தைகளிடம் பல விளுக்களைக் குறிப்பாக உணர்த்தி, எடுத்துக்கொண்ட பொருளின் பல கூறுகளைப் பார்க்கச் செய்கின்றனர்; அவற்றை முன்னறிவுடன் தொடர்புறவும் செய்கின்றனர். விளுக்களை விடுக்கும் கோக்கம் குழந்தையின் அறிவைச் சோதிப்பதன்று; அவன் சிந்தனையைத் தூண்டி புதிய கூறுகளைப் பார்க்கச் செய்வதே. அவனது விடுப்பூக்கம் கிளர்ந்தெழச் செய்யப்பெறுகின்றன ; குழந்தையும் சில விடைகளைப் பெறுகின்ருன்; இவை புதிய பிரச்சினைகளைக் கிளப்பி விடு கின்றன ; அவை பொருளை மீட்டும் கவனிக்கச் செய்கின்றன. கவனத்தின் அகலம் : ஒருவர் ஒருசமயத்தில் கவனிக்கக்கூடிய பொருள்களின் எண்ணிக்கையே கவனத்தின் அகலம் என்பது. கடந்த கால ஆராய்ச்சி இந்த எண்ணிக்கையை ஐந்து அல்லது ஆறு என்று கிலே காட்டியது; இன்று அதனைக் குறித்து சோதனை முடிவுகள் உள்ளன. காம் ஒரு சமயத்தில் ஒரே பொருளைத்தான் கவனித்தல் இயலும். இது சாதாரண அநுபவத்திற்கு மருனதாகத் தோன்றலாம். படித்தலில் ஒருவர் பல எழுத்துக்கள் அல்லது சொற்களைக் கவனிக்கலாம். பார்வைபற்றிய கவனத்தின் அகலத்தை கவனவீச்சறிகருவியால்’’ அளக்கலாம். சோதனைக்குட்படுவோரிடம் ஒழுங்கற்ற முறையில் அமைந்துள்ள புள்ளிகளின் தொகுதியடங்கிய அட்டையொன்று கொடுக்கப்பெறுகின்றது. அவர் சுமார் ஐந்து விடிைக்குள் அதில் எத்தனைப் புள்ளிகள் உள என்று குறிக்கவேண்டும். இவ்வாறு பல்வேறு எண்ணிக்கையுள்ள புள்ளிகள் அடங்கிய அட்டைகள் கொடுக்கப் பெறும். ஒரு முதிர்ந்தவர் 6 புள்ளிகள் வரை கவனித்தல் கூடும் என்று சோதனை மூலம் கண்டறியப்பெற்றிருக்கின்றது. ஆனல், அப்புள்ளிகள் தனித்தனியாகக் கவனிக்கப்பெறவில்லை; அவை முழுமையாக ஒரே நிகழ்ச்சிபோலவே கவனிக்கப்பெறுகின்றன. பல பொருள்கள் ஒரு 3*-eịssuth - span. sw ssasar está srsts(Gest - tachistoscope.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/258&oldid=778054" இலிருந்து மீள்விக்கப்பட்டது