பக்கம்:கல்வி உளவியல்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 கல்வி உளவியல் யில் ஒரு துறையில் திறமையாக உற்றுநோக்குபவர்கள் பிறவற்றில் திறமையாக அதைச் செய்ய முடிவதில்லை. (எ . டு). கூலவாணிகத்தில் திறமையாகப் பொருள்களை உற்று நோக்குபவரிடம் வைரங்களை உற்று நோக்கும் திறனும் இருக்கும் என்று சொல்ல முடியாது. எனவே, உற்று நோக்கலில் மாளுக்கர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டுமாயின் அவர் கட்குப் பலதுறைகளில் கவர்ச்சிகளை எழுப்புதல் வேண்டும். அஃதுடன் வெவ்வேறு துறைகளிலும் கூடியமட்டில் நேரடியான அனுபவங்கள் ஏற்படும் வாய்ப்புக்கள் தருதல் வேண்டும். மேலும், இத்துறைகள் பல வற்றிலும் பல விதத் தகவல்கள் தெரிந்திருக்க வேண்டும். இதை நிறை வேற்றுதற் பொருட்டே இன்று பள்ளிகளில் அடிக்கடிச்சுற்றுலாக்கள்’** மேற்கொள்ளப் பெறுகின்றன. நகர்ப்புற மாளுக்கர்கள் நாட்டுப் புறத்திற் கும், நாட்டுப்புற மாணுக்கர்கள் நகர்ப்புறத்திற்கும் இருவரும் வரலாற்றுப் புகழ்ப்பெற்ற இடங்கள், மலைகள், ஆறுகள், நீர்வீழ்ச்சிகள், அணைத் தேக்கங்கள், மின்னற்றல் நிலையங்கள் போன்ற இடங்களுக்கும் சென்று பலவற்றை உற்று நோக்கி அறிதல் பெரிதும் பயன்விளைவிக்கும். சுற்றுலாவின் நோக்கம் முன்னரே உரைக்கப் பெற்று, சுற்றுலாவின் பொழுது பார்க்க வேண்டியவற்றை விளக்கி, மாளுக்கர்களைக் குறிப்புக் கள் எடுக்கச் செய்து, சுற்றுலா முடிந்தபின்னர் கண்டும் கேட்டும் அறிந்தவற்றை ஆசிரியர்கள் மாளுக்கர்களுடன் கலந்து பேசி, நினைப் பூட்டி, அனைத்தையும் திரட்டி கிரல்படக் கட்டுரையாகவோ, சொற்போர் மூலமாகவோ, விளுவிடை மூலமாகவோ வெளிப்படச் செய்தால், சுற்று லாவின் முழுப்பயனையும் நன்கு அடையலாம். 1 8 4 si i pisar - excursion.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/95&oldid=778671" இலிருந்து மீள்விக்கப்பட்டது