பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

கல்வி உளவியல் கோட்பாடுகள்


களுக்குப் பின்னணியில் நின்ற பெண்கள். முன்னணியில் வந்து நிற்கின்றனர். 12.14 யாண்டுவரை பெண்கள் உயரத்தில் சிறந்து விளங்குகின்றனர்; 15-ஆம் யாண்டுவரை எடையிலும் சிறந்து விளங்குகின்றனர். இதற்குள் ஆண்கள் இந்த ஓட்டத்தில் பெண்களைப் பிடிக்க வந்து பெண்களுக்கு முந்தியும் ஒடி வெற்றி அடைகின்றனர். ஆண்கள் பால் முதிர்வு பெறுவதற்கு 1, யாண்டுகளுக்கு முன்னரே பெண்கள் பூப்பெய்திப் பால்-முதிர்வு பெற்று விடுகின்றனர்.

புலன்கள் வளர்ச்சி: பிறந்த குழந்தையின் துலக்கங்கள் பெரும்பாலும் நோக்கமற்றவையாகவே இருக்கும்; முழு உடல் பற்றியவையாகவே இருக்கும். முதலில் இரண்டு கண்களும் சேர்ந்து செயற்படுவதில்லை. இரண்டு கண்ணும் ஒருமுகப்பட்டு ஒரு பொருளைப் பார்க்கும் நிலை 15 நாட்களில் வருகின்றது. பொருள்கள் தோன்றுவதையும் மறைவதையும் காணமுடிகின்றது. பல குழவிகள் பிறந்தவுடன் ஒளிகளை அறியா; சில நாட்கள் சென்ற பின்னரே அறியும். அழும் குழந்தை தாலாட்டுப் பாட்டைக் கேட்டு வாளா இருந்தால், ஒலிகளை அறிவதாக ஊகிக்கலாம். குழந்தைக்குப் பிறந்தவுடனே சுவையுணர்ச்சி உண்டாகின்றது. ஆயினும், சில திங்கள் வரை சுவையுணர்ச்சியில் அதிக வளர்ச்சி ஏற்படுவதில்லை.

வாழ்க்கைக்கு வேண்டிய நரம்பு நுண்மங்கள்[1] யாவும் பிறக்கும் பொழுதே இயற்கையாக அமைந்து விடுகின்றன. ஆனால், முழு வளர்ச்சியும் பெறச் சில யாண்டுகளாகும். மூளையின் பெரும்பகுதி செயற்பட ஆற்றலின்றிக் கிடக்கின்றது; கீழ்நிலைப் பகுதியே தேர்ச்சியுடையது. கருவுலக வாழ்விலேயே சில நரம்புப்பாதைகள் ஏற்பட்டு, தேவையானபோது அனிச்சைச் செயல்களாக இயங்குகின்றன. (எ.டு.) சுவாசித்தல், உறிஞ்சுதல், விழுங்குதல், தும்மல், இருமல் போன்ற மறி வினைகள்?[2] நாளடைவில் நரம்புக் கம்பிகள் உறைகளால் மூடப்பெறுகின்றன. இச்செயல் பிறக்குமுன்பே தொடங்கி விடுகின்றது. ஆனால், நரம்பு மையங்கள் முழு வளர்ச்சியடைய நாளாகின்றது. இல்லாவிட்டால் பிறந்தவுடன் பல தாக்கல் களால் குழந்தைக்கு நெருக்கடி உண்டாகும். புதிய தூண்டல்களின் பயனாக மூளைப் புறணியை அடையும் பல பாதைகள் உண்டாகின்றன. முதல் யாண்டில் மூளையின் பருமன் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது; குழந்தைக்குக் குல்லாய் விரைவில்

  1. 31. நரம்பு நுண்மங்கள் -Neurones.
  2. 32. மறிவினை-Reflex action.