பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கற்றல்

221


அடைதல், நாட்டுப்படம் (Map) படித்தல், நல்ல கையெழுத்துத் திறன் எய்துதல் போன்றவை.

கில்பாட்ரிக் கண்ட தன்னோக்க முயற்சிமுறை செயலை அடிப்படையாகக் கொண்டது. இதில் நான்கு படிகள் உள்ளன.

முதலாவது: நோக்கம். மாணாக்கர்களே தங்கள் திறமைக்கும் நிலைமைக்கும் பொருத்தமான ஒரு செயலைத் தேர்ந் தெடுத்துக் கொள்வர். ஆசிரியர் இதற்கு வழிகாட்டுவார். இரண்டாவது: திட்டமிடல். ஆசிரியர் வழிகாட்ட மாணாக்கர் களே அச்செயலைத் திறனுடன் முடிக்கும் வழிமுறைகளை ஆராய்வர். மூன்றாவது: செய்து முடித்தல். இதுதான் மாணாக்கர்கட்கு உற்சாகத்தை அளிப்பது; இதில் காலமும் ஆற்றலும் வீணாகாமல் கண்காணித்து வருவது ஆசிரியரின் கடமையாகும்; செயலிலிருந்து வழிவிலகிப் போகாது விழிப் புடனிருந்து அதை முற்றமுடியக் கொண்டு செலுத்த வேண்டும். நான்காவது: சீர்தூக்கல் அல்லது மதிப்பிடல். இதிலும் ஆசிரியர் தலையீடு கூடாது; மாணாக்கர்களைக் கொண்டே திறனாயச் செய்தல் வேண்டும். சுருங்கக்கூறின், இந்நான்கு படிகளையும்

       தேர்ந்தெடுத்துத் திட்டமிட்டுச் செய்ததற்பின் சீர்தூக்கி
       ஆய்ந்தறிதல் நாற்படிகள் ஆம்.

என்ற குறட்பாவில் அடக்கி நினைவில் வைத்துக்கொள்ளலாம்.

செயல் திட்டத்தின் நிறைகள்: செயல் திட்டத்தின் பயன்கள் பல. இத்திட்டம் செயல்முறை உளவியலைப் பற்றுக்கோடாகக் கொண்டது. அறிவு, திறன், ஒழுக்கம் முதலிய பண்புகள் உண்மைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதனால்தான் வளர்கின்றன என்பது உளவியலாரின் கருத்து. செயல் திட்டம் மாணாக்கரின் நோக்கத்தின் அடிப்படையில் அமைந்தது; ஆகவே, இதில் அவன் அக்கறை கொள்வது இயல்பு. இத்திட்டம் மாணாக்கர்கட்கு உண்மையாகக் காணப்படுகின்றது; எளிதில் விளங்கவும் செய்கிறது. இதன் முடிவுகள் தெளிவானவை; விரும்பத்தக்கவை. இக்காரணங்களால் மாணாக்கனே திட்டம் வகுத்து நடத்துவது நல்லதென்று கருதப்பெறுகின்றது. செயல் திட்டம் தனிப்பட்ட தாயிருப்பின், அது தனியான் வேற்றுமைகளை அனுசரிக்கின்றது; குழுத்திட்டமாயிருப்பின், அது சமூகப் பண்பாகிய கூட்டுறவினை வளர்க்கின்றது.

சில குறைபாடுகள்: இத்திட்டத்தில் சில குறைகளும் உள்ளன. முதல்தரமான திட்டத்தை எளிதாகவும் விரைவாகவும் வகுக்க முடியாது. ஏற்கெனவே வேலை நெருக்கடி