பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்றலில் அடங்கிய மூலக்கூறுகள்

253



്n:ബ്

ஒமப்பொடி, அவற்றுப் படிமம் (எ .டு) மயிர்பட்டுணர்ச்சி', கம்பளத்தின் உணர்ச்சி, புனிற்றிளங்குழவியைத் தொடும் உணர்ச்சி. தசை இயக்கப் புலன்: (எ .டு) எழுதுதல், பந்தடித்தல், சுமையைத் தாங்குதல். மக்கள் பல்வேறுவகைப் புலன் உணர்ச்சிகளைப் பெறுவதைப்போலவே பல்வேறுவகைப் படிமங்களையும் பெறுகின்றனர். மேலே கூறிய எடுத்துக் காட்டுகள் ஒவ்வொன்றிலும் கூறிய பொருள்களை நேரில் தொட்டோ, பார்த்தோ, சுவைத்தோ அவற்றைப்பற்றி அறிந்தால் அந்த மனச் செயல் புலனுணர்ச்சியை அடிப்படை யாகக் கொண்ட புலன் அறிவு (Sense-perce:ti:n) ஆகும். அவ்வாறன்றி இப்பொருள் நம்முன் இல்லாதபொழுது அவற்றை அநுபவிப்பதுபோன்ற உணர்ச்சிக்குக் கற்பனை என்று பெயர். இதனால் ஒவ்வொரு பொறியுணர்ச்சிக்கு ஏற்பக் கற்பனையும் உண்டு என்று அறிகின்றோம்.

புலன் உணர்ச்சியும் படிமமும்: . .மங்கள் அதுபவிப்பதிலும் பயனிலும் புலன் உணர்ச்சிகளைவிடத் தாழ்ந்தவையே. எவ்வாறு தாழ்ந்தவை என்பதை ஈண்டு ஆராய்வோம்.

(1) புலன் உணர்ச்சி உண்மைச் சூழ்நிலையினின்றும் தோன்றுவது. படிமம் இத்தகைய பின்னணியினின்றும் பிரித்தெடுக்கப்பெற்றது. ஆதலால், படிமம் துண்டுபட்டதும் தொடர்பற்றதுமாகத் தோன்றுகின்றது.

(2) உறைப்பிலும்** இரண்டிற்கும் வேறுபாடு உண்டு. புலன் உணர்ச்சி மனத்தைத் தாக்குவதைப்போல் படிமம் தாக்கு வதில்லை. அலைகடலை நேரில் பார்க்கும்பொழுது அத்துரண்டல் நம் மனத்தை அலைப்பது போல் அதன் படிமம் நம்மைத் தாக்கு வதில்லை. அங்ங்னமே இன்னிசைக் கச்சேரியும் கண்கூச்செறியப் பாயும் மோட்டார் விளக்கின் ஒளியும்போல் அவற்றின் படிமங்கள் நம்மைத் தாக்குவதில்லை.

(3) இரண்டிற்கும் தெளிவிலும் வேறுபாடு உண்டு. சாயல்கள் புலன் உணர்ச்சிகளைவிடத் தெளிவற்றவை, மங்கித் தோன்றுபவை. அவற்றிற்கு விவரங்கள் குறைவு. புலன் உணர்ச்சிகள் தெளிவானவை; நிறைவுடனிருப்பவை. புலன் உணர்ச்சியில் உள்ள பல நுட்பங்கள் படிமத்தில் இல்லாமையே இதற்குக் காரணமாகும்.

(4) படிமம் புலன் உணர்ச்சியைவிட நிலை குன்றியது; ஊசலாடும் தன்மையுடையது. துரண்டல் உள்ளவரை புலன்

47. மயிர்ப்பட்டு.wst. 48. o. opill-i-Intensity.