பக்கம்:கல்வி எனும் கண்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

கல்வி எனும் கண்


கல்வி பற்றியும் பிற நிலைகளைப் பற்றியும் உயர்நிலைக் கல்வி நிலை முதலியன பற்றியும் அவ்வத் தலைப்புகளில் பிறகு ஆராயலாம்.

நம் நாட்டில் நன்கு பயின்று சிறக்கப் பட்டம் பெறுபவர் நம் நாட்டில் தங்காது பிற நாடுகளுக்குச் சென்றுவிடுகின்றார்களே என்று பெருந்தலைவர்கள் உள்படப் பலர் வருந்துகின்றனர். அண்மையில் நம் தமிழக முதல்வர் கூட அத்தகைய கருத்தினை ஓரிடத்தில் பேசியுள்ளார்கள் என அறிகிறேன். அதற்கு அடிப்படைக் காரணத்தை ஆராயவேண்டும். நான் 1985இல் மேலை நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் சென்ற காலை அங்குள்ளவர்களை இதுபற்றிக் கேட்டேன். பல நல்ல மருத்துவர்கள் (Doctors) பொறியியலாளர்கள் (Engineers)-பிற துறைகளில் வல்லுநர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்-அங்கங்கே சிறக்கச் செயல் புரிந்து அவ்வந் நாட்டை வளப்படுத்துகிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரையும் நான் ‘தாய்நாட்டை விட்டு ஏன் வந்தீர்கள்?’ என்று கேட்டேன். அவர்கள் அனைவரும் கூறிய பதில்கள் ஏறக்குறைய ஒரே முடிவினைத் தருவதாகவே உள்ளன. ‘நாங்கள் இங்கே நிறையவே சம்பாதிக்கிறோம். ஆனால் தமிழ்நாட்டை விட்டு வர மனமில்லைதான். இங்கே சம்பாதிப்பதில் பத்தில் ஒரு பாகம் அங்கே சம்பாதித்தாலும் போதும்; மன நிறைவோடு வாழ்வோம். இங்கே அறிவுக்கு, திறனுக்கு, ஆற்றலுக்கு, ஆக்க வழிக்கு உழைக்கும் உழைப்புக்கு முதலிடம் தருகிறார்கள். அங்கேயோ-தமிழ் நாட்டில் வேண்டியவர்களுக்கு, கையூட்டு தருபவர்களுக்கு தன் சொந்தக்காரனுக்கு-ஜாதிக்காரனுக்குத் தானே முதலிடம். அவர்களுக்கே பதவி உயர்வு, பிற எல்லாச் சலுகைகளும் தரப்பெறுகின்றன என்று நைந்து புலம்புகின்றனர். அவர்கள் திறனால் அங்கே எத்தகைய அற்புதகங்கள் நிகழ்கின்றன. அவர்கள் எல்லாம்-பொறியாளர்கள்-மருத்துவர்கள்-நோபல் பரிசு பெற்றவர்கள்-பேராசிரியர்கள்-பிற துறை வல்லுநர்கள்-இங்கே தமிழ்நாட்டில் இருந்தால் நாடு