பக்கம்:கல்வி எனும் கண்.pdf/71

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
68
கல்வி எனும் கண்
 


வேண்டும். பத்தாம் வகுப்பில் வெற்றிபெற்று இரண்டு ஆண்டுகள் கழிந்த பிறகே +2 எழுதவேண்டும் என்ற விதி கட்டாயம் ஆராயப் பெறவேண்டும்.

சென்ற ஆண்டு கல்லூரிகளில் இத்தகைய மாணவர்கள் சேர்க்கப்பெற, பின் பல்கலைக் கழகம் அவர்களை விலக்க அவர்கள் நீதிமன்றம் சென்று வெற்றிபெற்றுத் தொடர்ந்து பயிலும் வாய்ப்பினைப் பெற்றனர். ஆனால் இந்த ஆண்டு சேர்க்கக்கூடாது என்ற விதியினைத் திட்டமாக முன்அறிவித்து விட்டமையின், எந்தக் கல்லூரியும் அவர்களைச் சேர்த்திருக்காது. எனவே உடன் இத்தகைய குறுக்குத் தேர்வினை - முறைக்கு மாறான ஒன்றினை - நிறுத்த வேண்டும்.தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத்து ஊறும் அறிவு (குறள்)

தாம் இன்புறுவது உலகு இன்புறக் கண்டு
காமுறுவர் கற்றறிந்தார் (குறள்)

வைப்புழிக் கோட்படா வாய்த் தீயில் கேடில்லை
மிக்க சிறப்பின் அரசர் செறின் வவ்வார்
எச்சம் என ஒருவன் மக்கட்குச் செய்வன
விச்சைமற் றல்ல பிற (நாலடியார்)