பக்கம்:கல்வி எனும் கண்.pdf/87

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
84
கல்வி எனும் கண்
 

கழகத்தில் தமிழை வைக்க ஏற்பாடு செய்கிறேன், என்றார். அவர் கூற்றும் உண்மையாகப்பட்டது. அப்போது தமிழ் நாட்டில் அண்ணா முதல் அமைச்சராக இருந்தார். நான் சென்னை வந்தபோது அவர் உதகையில் இருந்தார். 'கோடையில் நானும் சில நாட்கள் அங்கே செல்வது வழக்கமாதலால் அங்கே சென்று, அண்ணா தங்கியிருந்த மாளிகையில் அவரைக் கண்டு பேசினேன். (அண்ணாவுக்கும் எனக்கும் இளமை முதல் இருந்த தொடர்பினை என் நூல் ‘ஓங்குக உலகம்’ என்பதில் விளக்கமாக எழுதியிருக்கிறேன்) அவர்களும் ‘பம்பாய் அமைச்சர் சொன்னது சரியே’ என்றும் அடுத்த ஆண்டு நிதி ஒதுக்கீட்டின்போது (Budget) நினைவூட்டுங்கள்: மராத்திக்கு ஏற்பர்டு செய்துவிடலாம் என்றும் சொன்னார்கள். நானும் பம்பாய் பல்கலைக் கழகத்தில் தமிழ் இடம் பெறும் என்ற மகிழ்ச்சியில் அங்கிருந்த அமைச்சருக்குக் கடிதமும் எழுதினேன். ஆனால் நாட்டின் துர்அதிர்ஷ்டம் அடுத்த ஆண்டு நிதி ஒதுக்கீட்டுக்கு முன் அவர் நோய்வாய்ப்பட்டார். பின் எழுந்திருக்கவே இல்லை. அவர்கள் இருந்திருந்தால் இன்னும் பல வட இந்தியப் பல்கலைக் கழகங்களில் தமிழ் இடம் பெற்றிருக்கும். தமிழ் தமிழ்நாட்டிலும் தனக்கு உரிய இடத்தை பெற்றிருக்கும். நாடு கொடுத்து வைக்கவில்லை. இன்று மாண்புமிகு பக்தவச்சலம் அவர்கள் காலத்தில் தந்த மான்யங்களுடனேயே பல பல்கலைக் கழகங்களில் தமிழ் உள்ளது என எண்ணுகிறேன். பிறகு புதிதாக வடநாட்டுப் பல்கலைக் கழகங்களுக்கு மானியம் தந்து தமிழுக்கு இடம் தேடினார்களா என்பது எனக்குக் தெரியவில்லை.

மொழி பற்றி இன்னும் எவ்வளவோ கூறலாம். ஆனால் இந்நூல் கல்வி பற்றியது. மொழி, கல்விக்கு முக்கியம் என்றாலும் இந்த அளவோடு இதை விடுத்துக் கல்வியின் பிற துறைகளைப் பற்றி எண்ணிக் காண்போம்.