பக்கம்:கல்வி நிலை.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 ി ിജ

தெண்கடல் வளாகம் பொதுமை யின்றி வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும் நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான் கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும் உண்பது நாழி உடுப்பவை இரண்டே பிறவும் எல்லாம் ஒரொக் கும்மே; செல்வத்துப் பயனே ஈதல் துய்ப்பேம் எனினே தப்புத பலவே.’ (புறம், 189). உலகம் முழுவதையும் ஒருகுடை நிழலில் சனி உரிமை யா ஆளும் அரசனே ஆலுைம், யாதும் இல்லாத இழிந்த வறியனே எனினும் உண்பதிலும் உடுப்பதிலும் சிறிது எம் தத்தாழ்வாய் காள்கள் கழிந்து போகின்றன. சிறந்த மேன் மைகள் அந்த அரச வாழ்வில் அமைந்தில. பின்னர் உயர்ந்த மகிமைதான் யாது? எனின், பிற உயிர்களுக்கு இரங்கி உத வும் அ ங் த உபகா நிலையிலேயே எல்லா உயர்வுகளும் - உறைந்துள்ளன; அவ்வாறு இதம்புரிந்தே மனிதன் உயர்ந்து கொள்ளவேண்டும்என நக்கீரர் இங்கனம் உாைத்திருக்கிரு.ர்.

மனித இனம் இனிது வாழ்ந்து தனிமகிமைகளை அடை பும் நிலைகளைக் கவிஞர்கள்(சுவையாக உணர்த்தி யுள்ளனர்.

    • Poets are the hierophants of an una pprehended inspiration.” [Shelley]

கைவிஞர் தெய்வத்தன்மை வாய்ந்த திவ்விய போதகர்’ என மேல் காட்டாரும் இங்ங்னம் உரைத்திருக்கின்றனர். இங்காட்டுக் கவிஞர் நிலைகளை ஒரளவு இந்நூல் காட்டி ஆயுள்ளது. கருதிக் கண்டு உறுதிகலங்களை ஒர்ந்துகொள்ளுக.

வையம் இன்புற வந்து கலைகளை

ஐயம் இன்றி அறிந்து தெளிந்துயிர் உய்ய அன்பின் உணர்வுகள் செய்துள செய்ய மேதைகள் சேவடி சேவிப்பாம்.

—t

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/134&oldid=552060" இலிருந்து மீள்விக்கப்பட்டது