பக்கம்:கல்வி நிலை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. நூ ல் 23

உயிர்த்துணைகளாய் மருவி புள்ளன. மதிகலங்களை அருளி வருவன அதிசய நிலையில் துதிசெய்ய கின்றன. நூலறிவுக் கும் சீலத்துக்கும் உள்ள உறவுரிமைகள் சாலவும் கருகி யுனா வுரியன. பழகிய பயிற்சி விழுமிய உயர்ச்சி யாயது.

புத்தகம், எடு, முறை என்னும் பெயர்கள் அாலுக்கு. உரிய நாமங்களாய் வந்திருக்கின்றன. நேர்ந்துள்ள பெயர் களுக்குக் காரணங்கள் ஒர்ந்து உனா நேர்ந்தன. உருவங் களும் பெயர்களும் யூக விவேகங்களாய் மருவி மிளிர்கின் றன. நெறியான ஒழுங்குகள் அமைந்தது முறைஎனவங்தது. புத்தியை அகத்துள் வைத்திருப்பது புத்தகம் எனவங் தது. அறிவுநலங்கள் உள்ளே பெருகியுள்ளமையால் புத்தகம் என்னும் போால் நூல் வித்தகமாய் விளங்கியுள்ளது. அகம் ஆகிய மனம் புதிய ஒளி பெற்று உயர்நிலையடைய உயிர் நிலையமா யிருப்பது புத்தகம் என நின்றது. எனவே அதன் தத்துவநிலையைத் தகவாய்உய்த்து உணர்ந்து கொள்ளலாம்.

'புத்தகத் துள்ளுறை மாதே பூவில் அமர்ந்தருள் தாயே’

எனச் சரசுவதி தேவியை இவ்வாறு துதித்துள்ளனர்.

கலா தெய்வம் இனிது அமர்ந்திருக்கிற புனித நிலைய மோய்ப் புத்தகங்கள் பொலிங்கிருக்கின்றன. ஆகவே அவம் மின் தன்மையும் தனி மகிமையும் நன்கு அறிய வந்தன.

பு த் த க ம் மனித இனம் மாண்புறும் படியான அறிவு கலங்களை உரிமையாக வைத்திருத்தலால் புத்தகம் அரியகலையின் கரு ஆலமாய் நிலவியுள்ளது. செல்வம் நிறைந்துள்ள கிதியறை வகளை உலகம் விழைந்து வியந்து போற்றுகின்றது; கல்வி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/29&oldid=551955" இலிருந்து மீள்விக்கப்பட்டது