பக்கம்:கல்வி நிலை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. க ல் வி 53

.ஈயும்தோறும் வளர்வது; எவராலும் கவர்ந்து கொள்ள முடியாதது; என்றும் நீங்காமல் எவ்வழியும் அழியாமல் எழுமையும் தொடர்ந்துவிழுமிய கலங்களை விளைத்துவருவது; அதல்ை கேடு இல் விழுச் செல்வம் எனப் பிடும் பெருமையும் பெற்றுள்ளது. கேடு இல்லாதது; விழுமிய நிலையது என்று இதனைத் தலைமையா விளக்கியதனுல் மற்றச் செல்வத்தின் -நிலைமைகளும் நீர்மைகளும் நேரே நன்கு தெரியலாகும்.

செல்வம் அயல் இருந்து வருவது; மயல் மிகுந்து புரி வது; அல்வழியில் பெருகுவது; நல்வழியை ஒருவுவது; கொடுக்கக் குறைவது; எடுக்கத் தேய்வது; காயத்தார் பகுப்பது; கள்வர் பகைவர் முதலாயினுேரால் கவர்ந்து கொள்ளப்படுவது; உள்ளச்செருக்கை விளைத்து உடைய வ%னக் கெடுப்பது; எள்ளல் இழிவுகளில் இழுத்துச்சென்று அல்லல் பலகொடுப்பது; கடுத்து அழிவது ஆதலால் கேடும் சிறுமையும் நீள உடையது என இது நாடறிய நின்றது.

மடமைக் களிப்பை விளைத்த உடலோடு ஒழிந்து போகின்ற செல்வத்தினும் உணர்வின் சுவையைப் பெருக்கி என்றும் உயிரோடு ஒன்றி கின்று உலவாத இன்பங்களை அருளிவரும் கல்வி எவ்வளவு மகிமை யுடையது எத்துணை மேன்மை வாய்ந்தது ஈண்டுஇதனை உய்த்துஉணரவேண்டும்.

மாற்படு புந்தியின் மறுவில் சேதனம்

பாற்படும் உயிர்க்கெலாம் பவத்தின் மாண்பயன் நூற்படு கல்வியின் நுவல் வளத்தினின் மேற்படு கின்றதில் விழுமிது இல்லையே. (கந்தபுராணம்)

வைக்கும் பொருளும் இல்வாழ்க்கைப் பொருளும் மற்று எப்பொருளும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/59&oldid=551985" இலிருந்து மீள்விக்கப்பட்டது