உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எனும்உ) பால்கம் NATIONAL கேம் CESTITUTE OF TAINSE உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் International Institute of Tamil Studies டி. டி. டி.ஐ.அஞ்சல், சென்னை-600 113 இயக்குநர் டாக்டர் ச.வே.சுப்பிரமணியன்

முன்னுரை 25-4-1983 களை உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் பல புதிய துறைகளில் நூல் வெளியிட்டுக்கொண்டு வருகின்றது. தமிழக ஊர்ப் பெயர்கள்' பற்றிய ஆய்வையும் அது செய்து கொண்டிருக்கின்றது.' ஊர்ப்பெயர்கள் பற்றிப் பலரும் இதுவரை ஆய்வு செய்து உள்ளனர். இன்னும் முழு நிலையில் தமிழக ஊர்ப்பெயர்கள் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும் நிலை இருப்பதாகத் தெரியவில்லை. சமீபத்தில் 'கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள் பற்றி திரு. ஆர். ஆளவந்தார் அவர்கள் சில மாதங்களாக ஆய்வு செய்து வரு கின்றார்கள் அதன் பயனை உலகிற்குத் தெரிவிக்கலாம் என்ற நிலையில் அதைத் தற்போது வெளியிடுகிறோம். திரு. ஆர். ஆளவந்தார் அவர்கள் சமீபத்தில் 'தமிழர் தோற் கருவிகள் என்ற ஒரு நூலை வெளியிட்டார். அதுவும் இத் துறையில் புதிய நூல். நல்ல சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. நூல். இதுவரை 'கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்' பற்றி எந்த வித நூலும் வந்ததாகத் தெரியவில்லை சில க்ட்டுரைகளும் குறிப்பு களும் வந்திருக்கலாம். அதனால் இந்தப் புது முயற்சியைத் தமிழுலகிற்குத் தருவதில் மகிழ்ச்சி அடைகிறோம். ஆனால் இன்னும் கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள் பற்றி வெளியீட்டு நிலையில் பல நூல்கள் வெளிவர வேண்டும். ஆய்வுக்குப் பல் வழிகளில் இந்த நூல் உதவும் என்று நம்புகிறோம். இந்த நூலைக் கண்ணும் கருத்துமாக நல்ல நிலையில் தயாரித்து அமைத்துள்ள திரு. ஆர். ஆளவந்தார் அவர்களைப் பாராட்டிப் போற்றுகிறேன். இது போன்ற நல்ல பல தமிழர் நூல்களை அவர் தரவேண்டும் என்று விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன். நிறுவனச் செயல்கள் அனைத்திற்கும் ஊக்கமும் ஆக்கமும் தருகின்ற மாண்புமிகு கல்வி (அமைச்சர் செ.அரங்கநாயகம் அவர் களுக்கு எங்கள் அன்பான நன்றியையும் வணக்கத்தையும் எப் போதும் தெரிவித்துக்கொள்ளுகின்றோம். அன்புள்ள, ச.வே. சுப்பிரமணியன்