பக்கம்:கல்வெட்டில் தேவார மூவர்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

பேராசிரியர் கா. ம. வேங்கடராமையா


இறைவியார் பாலமுது அளித்த செய்தியை நினைவு கூர்ந்து, கழுமலத்து ஆளுடைய பிள்ளையாருக்குத் திருப்பாற் போனகம் செய்தருளுவதற்காகத் திருமடைப்பள்ளிப் புறமாகத் தலைச்சங்காட்டைச் சேர்ந்த சிற்றூர் சோழ பாண்டிய நல்லூரில் 5 வேலி நிலம் அளிக்கப் பெற்றதாக ஒரு சாசனம் கூறுகிறது.

முதற் குலோத்துங்க சோழன் காலத்திய, சிதம்பரத்தில் உள்ள உடமொழிக் கல்வெட்டுச் சுலோகங்களுள் ஒன்று.

“மலைமகளின் ஸ்தனத்தில் இருந்து பாலைப் பருகிக் கலைமகளின் அருளைப் பெற்று ஆனந்தக் கூத்தாடி ஸ்ரீகண்டன் புகழைப் பாடிய ஆளுடைய பிள்ளையாரான திருஞானசம்பந்தப் பெருமாளுடைய பொன் திருமேனியை நிறுவி அதற்குப் பாயசம் நிவேதிக்க (நரலோக வீரன்) ஏற்பாடு செய்தான்” என்று கூறுகிறது.

“யத்வாணீ கிரிஜா குசப் பிரகளிதம்
பித்வா ப்ரந்ருத்தம் பயோ
மாதுர்யாததிகாம் ததோ விகவித
ஸ்ரீ கண்ட கீர்த்திக் கிரமா
மூர்த்திம் தஸ்ய த்ருசாம் மஹோத்சவகரீம்
காந்யா குமாரஸ்ய தாம்
க்ருத்வா யாம்ச சாதகும்ப கழதம்
தஸ்யாதி சத் பாயசம்”
2

என்பது சாஸன வட டமொழிப் பாடல்.

இங்ஙனம் சிவஞானம் பெற்றமையால் திருஞானசம்பந்தர் “திருஞானம் பெற்ற பிள்ளையார்” என்று பல சாசனங்களில் குறிக்கப் பெறுகிறார்.

‘அரும்பாக்கிழான் மணவில் கூத்தனான காலிங்கராயன்’ என்ற ஓரரசியல் தலைவன் முதல் குலோத்துங்க சோழன் காலத்திறுதியிலும், விக்கிரமசோழன் காலத்து முதற்