பக்கம்:கல்வெட்டில் தேவார மூவர்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வெட்டில் தேவார மூவர் 47

3. சுந்தரமூர்த்திகள்

சுந்தரரைக் குறித்துக் கல்லெழுத்துக்களினின்றும் நம்மால் அறியப் பெறுவனவற்றைக் காண்போம்.

ஆலால சுந்தரர்

ஆலால சுந்தரர் என்பது சுந்தரர் திருக்கயிலையில் இருந்த பொழுது கொண்ட திருப்பெயர் ஆகும். இது திருவொற்றியூர்க் கோயிலில் உள்ள கல்வெட்டொன்றில் ஒரு விளாகத்துக்குப் பெயராமைந்திருந்தது.

"ராஜநாராயணச் சம்புவரயற்கு யாண்டு ஏழாவது... சிவத் துரோகிகளை ஆராய்ந்து. இவர்கள் மனையும் காணியுமாய்ச் சண்டேசுவரப் பெருவிலையாக விற்று அம்மனைகள் நீக்கிநின்ற மனைகளும் காணியுமாய்க் கல்வெட்டினவிடத்தில்... நங்காம்புலமான ஆலாலசுந்தர விளாகம் மூன்றில் ஒன்று...'

அன்றியும் சோணாடு கொண்டு முடிகொண்ட சோழபுரத்தில் வீராபிஷேகம் செய்தருளிய ரீ சுந்தரபாண்டிய தேவரின் 17ஆம் ஆட்சியாண்டில் (கி. பி. 1233ல்) திருநெல்வேலியில் ஆலாலசுந்தரர் திருமடம் என்று ஒருமடம் குறிக்கப் பெற்றுள்ளது.

முதற் குலோத்துங்க சோழனின் 49ஆவது ஆட்சி யாண்டுக்குரிய காளத்திக் கல்வெட்டில் ஆலால சுந்தரன் நந்தவனம் என்று ஒரு நந்தவனம் குறிப்பிடப் பெறுகிறது.

ஆச்சாள்புரத்திற்கு அருகில், ஆலாலசுந்தர நல்லூர் என்று ஒரூர் இருந்தமை கல்வெட்டொன்றால் அறிய வருகிறது.

மூன்றாம் இராசராசனின் ஆறாவதின் எதிராமாண்டுக் கல்வெட்டு, 'பூண்டி என்னும் ஊரினராகிய புகலிவேந்தர் என்பார் தங்குவதற்கு ஆலால சுந்தரன் குகை' என்னும் குகை