பக்கம்:கல்வெட்டில் தேவார மூவர்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 பேராசிரியர் கா. ம. வேங்கடராமையா

இவ் வோவியத்துக்கு மேலே உள்ளது கயிலைக் காட்சி. சிவபெருமான் புலித்தோலின் மேல் யோகாசன நிலையில் அமர்ந்திருக்கிறார்: நந்தி இவர்க்கு முன்னுள்ளது; பல முனிவர்கள், தேவ மகளிர் உருவங்கள் எதிரே உள்ளன. சிவபெருமான் உருவம் செந்நிறத்திலும் முனிவர் உருவங்கள் நீல நிறத்திலும் உள்ளன. ==

வாழி திருநாவலூர் வன்றொண்டர் பதம் போற்றி!

இதுகாறும் கூறியவாற்றான் தேவார மூவர் வரலாறும் திருநெறிய மெய்ஞ்ஞானத் தமிழும் தமிழ் மக்களால் போற்றப் பெற்றமை நன்கு விளங்கும். இவ்வண்ணமே இனியும் செந்தமிழ்ச் சான்றோர் யாவரும் மூவர் வரலாற்றைப்

போற்றுவராகுக.

அடிக்குறிப்புகள்

1. பெரிய புராணம் வெள்ளானைச் சருக்கம், பாடல் எண்- 2,

2. S. I. I. Vol. I. Ins. No. 523, 203 of 1912

3. S. I. I. Vol. V. No. 422; 133 of 1894.

4. மூன்றாம் திருமுறை - தருமை ஆதீனப்பதிப்பு, பக்கம் 42.

5. மேற்படி பக்கம் 90.

6. 28 of 1914.

7. S. I. I. VoI. IV. No. 397; 73 of 1890.

8. S. I. I. Vol. V No. 418, 129 of 1894.

9. S. I. I. Vol. ii. Part II, No. 38.

1O. 37 of 1920.

11. 229 of 1927.

12. S. I. I. Vol. II Part III. No. 65.