பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

கல் சிரிக்கிறது


ஆபீஸ் கதவு இரண்டாவது சாவிக்குத் திறந்தது. இரண்டு கைகளிலும் கைக்குட்டையைச் சுற்றிக் கொண்டு - க்ளோவ்சுக்கு எங்கே போறது? நாளைக்குச் சேட்டு வந்து கை பட்டால் எல்லாம் சரியாகப் போய் விடும் இருந்தாலும் துப்பறியும் நாவல்களில் படிக்கி றோம், சினிமா பார்க்கிறோம். எச்சரிக்கையாக இருந்து விடல் நல்லது - கைக்குட்டையைச் சுற்றிக் கொண்டு பெரிய சாவிகளுள் பெரிய சாவியைப் போட்டுத் திருப் பினதும்- - நல்ல கனம். நாலு இஞ்சுக்குக் குறைவில்லை. உள்ளே இன்னொரு சொர்க்கவாசல் கதவு - அடுத்த பெரிய சாவி. அதுவும் திறந்த பின்தான் மூச்சு தெம்படைந்தது, குபி ரென்று கிளம்பிய குங்குமப்பூ மணத்தில் மண்டை கிறங் கிற்று. அலாரம், காம்பினேஷன் லாக். இது பற்றியும் புத்தகங்களில் படித்ததும்,சினிமாவில் பார்த்ததோடும் சரி. அசட்டுத் தைரியம்தான். கமலாம்பிகை அருள் காப்பாற்று கிறது. ஆனால் இந்தக் கதவுகளை வைத்துக் கொண்டு சேட்டுக்கு வேறு சிங்க நாதங்கள் எதுக்கு? கவலையே வேண்டாம். இது ஏதோ பழங்காலத்துக் கற்கோட்டை. மொத்தம் மூன்றடுக்குகளில் மேலும் கீழும் ஏதேதோ தஸ்தாவேஜுகள், புஸ்தகங்கள், பதிவேடுகள். மேல் தட்டில் ஒரு குட் டி லகஷ்மி படம். நடுவில் லாக்கர் கொத்தில் தேடி, அதற்கொரு குட்டிச் சாவி, அந்தச் சாவியைச் சேட் எங்கேனும் தனிப் படுத்தியிருந்தால் இத்தனை ரிஸ்க்கும், சிரமமும் பாழ். திறந்ததும் இரண்டு நகைப் பெட்டிகளைத் தாண்டி, உள்ளே பத்துப் பதினைந்து குட்டித் துணிப் பைகள். சுத்தமாக முடித்துப் போட்டு, ஒவ்வொன்றிற்கும் லேபல் கட்டித் தொங்க விட்டு, இரண்டு வரிசைகளில் அடுக்கி யிருந்தன. இதிலேயே குறைஞ்சது ஐம்பதாயிரம்