பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

@fr. 字。牙f了。 6? சிருக்கும் செனகரியத்துக்கு காணிக்கையா ஒரு ஐயாயிரம்: அவ்வளவுதா. இதென்ன தாசி அபரஞ்சி கதையா? கனவில் வந்ததுக்குத் தrனை? நாடார் சொன்ன கதையை நான் வளர்க்கனுமா? ஏற்கனவே அவன் முழம்போட்டு அளந்து வெச்சிருக்கும் என் முட்டாள் தனத்தை நானே உறுதிப் படுத்தணுமா? குருட்டு யோசனைக்கும் ஒரு முற்றுப் புள்ளி கிடையாதா? ஒரு பெரிய சுமையைத் தூக்கி எறிவது போல், யோசனையை உதறித் தள்ளிவிட்டு, பெட்டியிலிருந்து புத்தகத்தை யெடுத்துத் தன் கணக்குகளை ஆராயப் புகுந்தார். ஆமாம், நினைத்த மாதிரியே இன்னும் பத்து நாட்களில் ஒரு ஐயாயிரம் நீண்ட தவணைத் தொகை திரும்புவதற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது. ஆனால் இதைத் துரக்கிக் கொடுத்து விட்டால் சோற்றுக்கு மாதாந்திர வட்டியை நம்பியிருக்கும் என் பாடு என்னவா கிறது? என்ன செய்யலாம்? இன்று காலை யிருந்த விச்ராந்தி என்ன!. இப்போ ஏன் ஊர்க் கவலையைப் பட்டுண்டு இருக்சேன்? என்ன செய்யலாம்? பிரம்புப் பிடியின் வளைவு போல் கேள்வி, கழுத்தில் மாட்டி யிழுக்கிறது. ஊரா, உறவா. என்ன தட்டுக் கெட்டுப் போறது? உலகத்தின் துயரத்துக் கெல்லாம் நான் பொறுப்பா? என்னால் தீர்க்கவும்தான் முடியுமா? இத்தனை வருடங்கள் கழித்துத் தற்செயலாகச் சந்தித்தோம். சந்தோஷமாய்த்தானிருந்தது. இல்லே என்கலே. கஷ்டத்தைச் சொன்னபோது கஷ்டமாய்த் தானிருந்தது. அனுதாபம் தோன்றியவரை உண்மைதான். ஆனால் ஒன்றும் செய்ய முடியாவிட்டால், எதுவுமே உதட்டு உபசாரத்தில்தானே முடிகிறது. இந்த ஐயாயிரத் தைக் கொடுத்தாலும் அவள் கஷ்டம் விடியப் போவதில்லை. நானே கடனைக் கட்டி நகையை மீட்டுக்