உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:களத்தில் கருணாநிதி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெளியே 30 நடமாடினால், அவனால் எதைச் செய்ய முடியும், பேசமுடியும், எந்தத் தொழில்தான் செய்திட முடியும், யார்தான் வேலைதருவர், தந்தாலும் எப்படி அதனை நிர்வகிக்க முடியும், மூளையற்ற மனிதனால்? ஐந்தாவது ஆண்டும் ஓடிக்கொண்டே இருந் தது, நாட்கள், வாரங்கள், மாதங்கள் என்றபடி. மூளைடாக்டர், ஜாடியிலிருந்த மூளையைப்பற்றிய எண்ணத்தைக் கூட விட்டிருந்தாலும் விட்டிருப்பார். ஒரு நாள், திடீரென்று, டாக்டரிடம் ஒரு மனி தன் ஓடிவந்தான். அவனைக் கண்டதும் டாக்டர் அப்படியே ஆச் சரியப் பட்டு நின்று விட்டார். யார் அந்த நபர், டாக்டரைத் திக்கு முக்காடச் செய்தவன்? யாருமில்லை. திக்பிரமையடையச் செய்தவன்? மூளைக்கோளாறு என்று வந்து, மூளையைச் சரிப்படுத்திக் கொண்டு வருவதற்குள், மூளையை விட்டுவிட்டுச் சென்ற, மனிதன்தான். ஆம். அதே நபர்தான் ஏறக்குறைய ஐந்தாண்டு காலமாக மூளையே இன்றி இருந்த மனிதன்தான்? அவன் டாக்டரிடம் வந்து, தான் விட்டுச் சென்ற மூளையைத் திரும்பத் தன் தலையில் பொருத்தி வைக்கும்படி கேட்டானாம். டாக்டர், அவனை ஆச்சர்யத்துடன், "ஏனப்பா, மூளையை விட்டு விட்டு, இத்தனை ஆண்டுகளாக, ஏறக் .