உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:களத்தில் கருணாநிதி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 நாயைப் பார்க்கவே மிகவும் கண்றாவியாக இருக் கிறது. அதுபடும் வேதனையைக் காணச் சகிக்க வில்லை. ஓடியாடி விளையாடிய நாய் ஓய்ந்து கிடப்பதைக் கண்டு, கண்ணீர் விடுகிறோம்; கவலைப்படுகிறோம், டாக்டர், நாய் விழைக்காது, பிழைத்திடும் அறி குறியே இல்லை என்று முடிவாகக் கூறிவிடுகிறார். பிழைக்காத, பிழைக்கமுடியாத நாயை வைத் துக்கொண்டு, அதுபடும் வேதனையைக் கண்டு கொண் டிருக்கவேண்டும், அது சாகும்வரை. நாய் அழுகி, புழுத்து, வேதனை தாங்காது தவித்து, அலறியலறிக் குலைத்து, உருக்குலைந்து, நடைப்பிணமாய் இன்னும் சிலகாலம், ஓரிரு நாட்கள் வாழப்போகிறது. ரு இந்தக் கோரக்காட்சி, கொடுமையான நிகழ்ச்சி, அன்புடன் வளர்க்கப்பட்ட, நாய்க்குத் தேவையா? கண்டு சகித்திடவும் இதனைக்காணவேண்டுமா? வேண்டுமா? நிச்சயம் சாகப்போகிறது, ஆனால் சங்கடப்படு கிறது; தாளமுடியாது தவிக்கிறது நாய், நோயால். இந்த நிலை நீடித்து, நாய் மிகவும் சீரழிந்து, நிம்மதியற்று இறப்பதை விட, உடனே, உடனடி யாக, இறந்துவிடுவது, இறக்கும்படி செய்வது மேல்.