உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:களத்தில் கருணாநிதி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41 காந்தீயத்திற்கும் இது புறம்பானதல்ல. காந்த யாரே கடைப்பிடித்தது, கொடுமையான அன்பு. ஆம்! காந்தியார் கூடக் கையாண்டிருக்கிறார் இத்தகைய அன்பை! அவருடைய ஆசிரமத்தில். காந்தியாரின் ஆசிரமத்திலே ஒரு கன்றுக்குட்டி. அது நோய்வாய்ப்பட்டு மிகவும் சங்கடத்திற்குள்ளா கிறது. எந்த விதச் சிகிச்சையும் பலன் தரவில்லை. மருத்துவர் கைவிட்டார், கன்றுக்குட்டி, பிழைப் பது அரிது, பிழைக்காது என்று கூறிவிட்டார். கன்றுக்குட்டி, மரணப் போராட்டத்தில் மன் றாடிக் கொண்டிருந்தது. மனச்சங்கடமான காட்சி, நிலைமை. களிப்புடன் துள்ளி விளையாடிய கன்று துவண்டு கிடந்தது. துயர் தரும் நிலை ! காந்தியார் கன்றைச் சுட்டுக் கொன்றிட ஒப்பி னார், அதன் கோரத்தை, சங்கடத்தைக் காணச் சகி யாது! இதன் விளைவாகக் காந்தியாரின் ஆசிரமத்தில் மரணத்தின் வாயிலில் மன்றாடிக் கிடந்த கன்று, சுட்டுக் கொல்லப்பட்டது. கொடுமையான அன்பு, அகிம்சையின் ஆசிரமத் திலும் நடந்தது, நடத்தப்பட்டது! இன்றைய காங்கிரசிடம் நாம் காட்டும் அன்பு, இத்தகையது தான்.