உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:களத்தில் கருணாநிதி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65 இது முறையா? சரியா?, சந்தர்ப்பவாதமா? சிந்தித்துப் பாருங்கள்! தியாகம்- எங்கள் பூந்தோட்டம். தியாகம்- எங்கள் வாழ்க்கை, வளம், முன்னேற் றப் பாதை, வழி, எல்லாம். தியாகப்பட்டியல் தேவையா ? எங்கள் மூச்சு, எங்கள் பேச்சு அத்தனையும் 'தியாகம்'தான, எங்கள் வாழ்வு, வாழ்க்கைச் சுகம், கஷ்டநஷ்டம் அத்தனையும் தியாகம்தான். எங்கள் இலட்சியமே, சுயமரியாதை வாழ்வுக் கான பாதையே, இன்பத் திராவிடமே, தியாகத் தீச்சுழலில், தியாகத்தணலில் மிதந்து வருவது தானே? தியாகத்தீயில், சுழலில், தணலில் புடம்போட்டு எடுக்கப்பட்ட தங்கக்கட்டிகள்-எம் வீரர்கள்-எமது லட்சியக் காளைகள். தியாகப்பட்டியல் தேவையா? முதன்முறை நடந்த இந்தி எதிர்ப்புப் போரிலே எங்கள் இளஞ்சிங்கங்கள், தாலமுத்து நடராசன்-' சிறையிலே செத்து மடிந்தனரே அது தியாகமல் லவா? இந்திப் போரிலே ஆயிரத்திற்கும் மேற்பட்டவர் கொடுஞ் சிறைக்குள் தள்ளப்பட்டனரே, இது தியாகமல்லவா?