உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:களத்தில் கருணாநிதி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 நாரணமங்கலத்திலே, 144 தடையுத்தரவு ! மீறிச் சிறை சென்று, கொடுமைக்கு உள்ளானார்களே, எங்கள் இளைஞர்கள்? ஐந்து மாதம், ஆறு மாதம், பத்து மாதம் என்று சிறையிலே வாடவில்லையா எங்கள் தோழர்கள்? 'காந்தியார் சாந்தியடைய' என்ற நூலை எழுதி னார் என்பதற்காக, எங்கள் ஆசைத் தம்பிக்குக் கடுங் காவல் விதிக்கவில்லையா? அவரது தலையை மொட்டையடித்துச் சிரைக்க வில்லையா, இந்த ஆளவந்தார்கள்? தண்டனை பெற்றவுடன் அவசர அவசரமாகச் சிரைத்தனர், தலையை! அவமானச்செயல்; அர்த்த மற்ற செயல்! ஆணவச்செயல். பாராள வந்த பாரத புத்திரர்கள் பார்பர்ஷாப் வைத்தனரே! செங்கோல் பிடிக்கவேண்டிய கையில், சவரக்கத்தியேந்தி, மொட்டையடித்தனரே! மானபங்கப் படுத்தினரே, மொட்டையடித்து, சிறையில். இது தியாகமா? அல்லவா? எதுதான் தியாகம்? இத்தனை கொடுமையையும் அனுபவித்தார். ஆசைத்தம்பி, புத்தகம் எழுதியதற்காக. ஆனால் அவர் குற்றமற்றவர் என்று இப்போது விடுதலை யெய்யப்பட்டார், உயர் நீதி மன்றத்தாரால். குற்றமற்றவர், கொடுமைகள் பலவற்றிற்கு, ஆளானார்,ஆளாக்கப்பட்டார். சிறையிலே தள்ளப் பட்டார்; தலையையும், சிங்காரத் தலை மயிரையும் பறித்தனர் ஆணவக்கார சர்க்கார். தியாகப்பட்டியல் தேவையா?