பக்கம்:களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

39

களப்பிரர் ஆட்சியில் தமிழகம்

திரிதரன் (ஸ்ரீதரன், கி.பி. 460)

இவன் குட்டபரிந்தனுக்குப் பிறகு அரசாண்டான். இவன் இளம் பரிந்தனுக்கு எந்தவகையில் உறவினர் என்பது தெரியவில்லை . இவன் அரசனான இரண்டாம் மாதத்தில், கலகக்காரனான தாதுசேனன் இவன் மேல் படையெடுத்து வந்து போர் செய்தான். அந்தப் போரில் இவன் இறந்து போனான். போர்க்களத்தில் இறந்து போனாலும் வெற்றி இவனுக்குக் கிடைத்தது. தாதுசேனன் தோற்று ஓடினான்.[1]

தாட்டியன் (கி.பி. 460-463)

திரிதரன் போர்க்களத்தில் இறந்த பிறகு பாண்டியன் தாட்டியன் அரசனானாள். இவனுக்கும் முந்திய அரசனுக்கும் உள்ள உறவு தெரியவில்லை. இவன் தாட்டியன் என்றும் தாட்டிகன் என்றும் மகாதாட்டிக மகாநாகன் என்றும் மகாதானிக மகாநாகன் என்றும் கூறப்படுகிறான். இவன் மேல் போர் செய்ய வந்த தாதுசேனனை இவன் வென்று துரத்தினான், உரோகண நாட்டில் உள்ள பேர் போன சுதரகாம (கதிர்காமம்) நகரத்தில் தாட்டிகனுடைய கல்வெட்டுச் சாசனம் சிதைந்து காணப்படுகிறது. இந்தச் சாசனம் இவன் கிரிலிகாரை என்னும் பௌத்தப் பள்ளிக்குத் தானஞ்செய்ததைக் கூறுகிறது. எனவே இவனும் பௌத்த மதத்தைச் சேர்ந்தவன் என்று தெரிகிறான். இலங்கையின் தென்கிழக்குக் கோடியில் இவனுடைய கல்வெட்டுச் சாசனம் கிடைத்திருக்கிற படியால், இவன் தாதுசேனன் இருந்த உரோகண நாட்டின் மேல் படையெடுத்துச் சென்று அவனோடு போர் செய்து வென்றான் என்பது தெரிகிறது. அங்கு வெற்றியடைத்த போது இந்தத் தானத்தைச் செய்து இக்கல்வெட்டெழுத்தை எழுதினான். உரோகண நாட்டில் இவன் சில காலத்தங்கியிருந்தான் என்று தெரிகிறது.[2]

இந்தப் பாண்டியனுக்கும் கலகக்காரனான தாது சேன்னுக்கும் பல போர்கள் நடத்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. அந்தப் போர்களைப் பற்றிச் சூலவம்சம் ஒன்றும் கூறவில்லை . கூறாதபடியினால் தாதுசேனன் பல தடவை தோற்றுப் போனான் என்று ஊகிக்கலாம். கடைசியாக நடந்த போரிலே பாண்டியன் மகாதாட்டிக மகாநாகன் இறந்து போனான். இறந்து போனாலும் வெற்றி இவனுக்கே. கிடைத்தது.[3]

பிட்டியன் (கி.பி. 463)

தாட்டிகனுக்குப் பிறகு பிட்டியன் அரசனானான். களப்பிரர் காலத்தில் இலங்கையை யரசாண்ட பாண்டியர்களில் இவன் கடைசிப்பாண்டியன். இவன் ஆட்சிக் காலத்தில் ஏழாம் மாதத்தில் தாது சேனன் இவன் மேல்


  1. சூலவம்சம் 38 ம் பரிசேதம் 32
  2. Epigraphia zeylanics Val III pp. 216-219
  3. சூலவம்சம், 15-ம் பரிச்சேதம்