பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுகு

முத்தையா ஒருகும் பிடு போட்டான். முன்னிலும் இது ஒரு பலக்கும் பிடு. தனியாச் சொன்னால் புரியாது. பார்த்தவருக்குத்தான் அந்தத் தனிப் பலம் தெரியும்.

“இன்ஸ்பெக்டர் ஐயா, எங்கள் மானேஜரய்யா எங்கிருந்தாலும் நல்லாயிருக்கணும். இன்னிவரைக்கும் என் குடும்பம் தின்றதே ஐயா இட்ட உப்புத்தான். இருவது வருடத்துக்கு முன்னால் ஐயா இங்கே அக்கொண்டய்யா வா இருந்தப்போ பண்ணி வெச்ச வேலை, தினம் அவர் பேரைச் சொல்லிக்கிட்டு, செய்திட்டிருக்கேன்’

‘பார்த்தேனா, பார்த்தேளா, முத்தையா இன்னிக்கு ஏதோ பெரிய பிளான் லே வந்திருக்கான். முணுக்குன்னா போதும். ஆளை முழுசா முழுங்கிடுவான். நகம் கூடக் கிள்ள மாட்டான்.”


முத்தையா கும்பிடுக்கு இன்னிக்கு எண்ணிக்கையே

கிடையாது போலும் ”

“எல்லாம் இல்லாக் குறைதானுங்க, டையன்

முன்னால் இந்த இடத்தின் பார்வைக்கும், மனுஷாளுக்கும் பழகினால், அப்புறம் ஐயா கருணை அவன் மேல் பட்டால்-”

பார்த்தேனா, RS., என்ன சொன்னேன்?”

இன்ஸ்பெக்டர் சுவாரஸ்யத்துடன் முத்தையா பக்கம் குனிந்தார்.

“ஆமாம் இருபது வருடத்துக்கு முன்னால் வேலை பண்ணி வெச்சார் இன்னியே, அப்போ உனக்கு முப்பது வயது இருக்காதா? முப்பது வயதில் பாங்கில் எப்படி

8 8

வேலை கிடைக்கும்?

‘சரியாப் போச்சு, மானேஜர் மூன்று விரல்களில், பக்தியுடன், செல்லத்திலிருந்து, புகையிலைத் துளை எடுத்து, இடது உள்ளங்கையில் வைத்துத் தேய்க்க ஆரம்பித்தார். அப்போ அவனுக்கு வயது இருபது