பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுகு i{}:

கள்ளுக் கடைக்குக் கப்பமாக் கட்டிடாதே. வட்டிக்கு ஆசைப்பட்டு, ஆப்பம் சுடறவளுக்கும், ஆடு மேய்க்கற வனுக்கும் கொடுத்துட்டு, வாயிலே விரலே வெச்சுக்கிட்டு நிக்காதே. பாங்கிலே போடு என் பாங்கிலே போடு. அதுபாட்டுக்குக் கு ட் டி போட்டுக் கிட்டிருக்கும்னு சொல்லுவேன். கேட்டான். என் கையிலேயே பன மூட்டையைக் கொடுத்திடுவான். நீயே பாத்து என்ன செய்யனுமோ சேஞ்சுக்கோன்னுவான்.

இப்போ, இன்னிக்கி, இதோ, இந்தத் தெருவிலேயே நமக்கு நாலு சக்களத்திமார் குடித்தனம் போட்டுட் டாங்க. முந்தா நேத்திக் காணாமே போன உன் மாட்டை, நீயும் நானும் என் காரிலே தேடுவோம் வா என்கிட்ட வா- இல்லே என்கிட்டே- இதென்ன பாங்கியா நடக்குது இப்பொல்லாம்? வெட்கக் கேடு. இந்தப் போட்டியிலே நாம் தலை முழுவாமே நிக்க ணும்னா

“உன் அக்கா மகன் மரக்காயன் டாஸ் புக்கை எழுதிக் கொடுக்கனும், இல்லையா?”

“அங்கிருந்து தானே ஆரம்பிக்கணுங்க!”

(மானங்கெட்ட முத்தையா

காரியவாதி முத்தையா

சூழ்ச்சிக்காரன் முத்தையா

ஆனால் எனக்காக முத்தையா

ஐயோ என்ன செய்வேன் முத்தையா)

‘விசுவம், பாஸ், புக்கைத் தேடி இந்தப் பையன்கிட்டப் போடு, ஒரு மேசையும் நாற்காலியும் ஒழிச்சு இவனுக்குத் தனியாக் கொடு முத்தையா” .

“காஷ்லே உக்காரச் சொன்னேளே ஸார்!’

“ஓஹோ, நீ சலசலக்க இதுதான் சமயமாக்கும். காஷ்லே நான் உக்கார்ரேன். அதைவிட இங்கே வெட்டி