பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுகு 147

வங்கி முறைகள் இப்போது எத்தனையோ கிளைகளாகப் பரவி முன்னேறியும் விட்டன.

அடகில் பல வகைகள். க ைட யி ல் நட்ட நடு வியாபாரத்தில் புழங்கிக் கொண்டிருக்கும் சரக்கு வெளி யிலிருந்து ரயிலில், கப்பலில், விமானத்தில் வந்து கொண் டிருக்கும் சரக்கு; கிடங்கிலிருந்து ரயிலில் ஏறிக் கொண் டிருக்கும் சரக்கு, உற்பத்தியின் பல கட்டங்களில் உருமாறிக் கொண்டிருக்கும் சரக்கு, வயல்களில் நட்ட கட்டத்தினின்று முளைவிட்டு அறுவடையாகி, அறுவடை விற்றுப் போகும் வரை பயிர்; பயிர் செய்ய, கிணறு வெட்ட, பம்பு செட்டுக்களின் மேல், காற்றில் ஆடிக்

_ :t:

கொண்டிருக்கும் பயிர்-இன்னும் எவ்வளவோ சொல்லிக் கொண்டு போகலாம்.

எல்லாவற்றுக்கும் அ டி ப் ப ைட அடமானம், வழக்கில் அடமானமாக மருவி, உருமாறி, பெ ருள் மாறி-மானம் என்றால் என்ன என்று கேள்வி கேட்கும் நிலைக்கு வந்து விட்டது. இதில் கையெழுத்து, அதில் கையெழுத்து; காட்டின இடத்தில் கையெழுத்துப் போடறேன் ராஜா, எனக்கு இப்போ வேண்டியது பணம். திருப்பிக் கொடுப்பதா ? ஆமாம். எவன் இல்லேங் கறான். அதான் கையெழுத்து வாங்கியிருக்கையே, காட்டின இடத்தில் எல்லாம் கண்மூடிக் கையெழுத்து.

வங்கி வழிகள் எவ்வளவோ மாறிவிட்டன. முகமே மாறிப் போச்சு வங்கி முறைக்கு.

ஆனால் நான் எங்கோ போய்க் கொண்டிருக்கிறேன், இன்று oேdown inspectionக்கு மானேஜருக்குத் துணை போகும் என்னுடைய இந்தப் பருவகட்டத்தில் இதெல் லாம் அதிகப்ரசங்கம். (ஆனால் மன்னிப்பு கேட்க மாட்டேன்)

டாக்சி வாசலில் நிற்கிறது.