பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 லா, ச ரா,

சேஞ்சு என்ன? இந்த ஊரிலே இந்தப் புளிச்ச ரவா தோசையும் நெருப்பாட்டம் பச்சை மிளகாய்ச் சட்டினியும் தவிர வேறேதும் எடுபடல்லியே! பண்ண றவன் எனக்குப் பாத்துப் பாத்து அலுத்துப் போச்சு. சாப்பிடறவா தினமும் எப்படித்தான் சாப்பிடறாளோ? எங்கெல்லாமோ ஒடியாடித் திரிஞ்சு, ஆஞ்சனேய பகவான் இங்கேதான் நமக்குக் கவளம் பிடிச்சுப் போட்டிருக்கார்.”

Good God! எனக்கு ஏதோ மதறாஸ் பார்ட்டியிலே இருக்கற மாதிரியே இருக்கு அதென்ன ஏதோ ஒரு டிலைனா கட் பண்ணி-?’

“விஜிடபிள் கட்லெட் லார்-” ராயர் ஆசையாய்ப் போடுகிறார். மானேஜர் அதைவிட ஆசையா, ருசி பார்த்து சாப்பிடுகிறார்.

‘ளலார் எனக்கு ஒரே ஒரு மனக்குறை, ஐஸ் க்ரீம் பண்ண முடியல்வியேன்னு-”

‘ஏன், பண்றதுதானே?’’ “மெஷின் இல்லை சாரி. லார்- ஸார்’ :Yes?” மானேஜர் வறுவலைக் கொத்தாய் அள்ளிப் போட்டுக் கொள்கிறார்.

‘பாங்க் கொஞ்சம் ஒத்தாசை பண்ணினால், ஹோட்டலை இன்னும் கொஞ்சம் ஷோ பண்ணி ஒரு ஃப்ரிஜ் வாங்கி-’

அதானே பார்த்தேன், ராயர் நேரிலேயே ஆஜரா யிட்டாரேன்னு! எல்லாம் அடிமடியிலே கை போடத் தான்!” .

எனக்குத் தலை லேசாகச் சுற்றுகிறது. இந்தக் கிலுகிலுப்பில் நான் நானா? நீ நீயா? யார் யாரா? தலைக்கு மேலே நிலாவா? ஐஸ் க்ரீமா? வத்தல் காச்சி படவா எனக்கு ஒரு பார்ட்டியா? நம்பும் படியிருக்