பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுகு’

9 தும்முகிறது, அடித் தொண்டையைக் கனைக் திது.

எங்கோ gate எண்ணெய் போடாமல் “கீச் கீச் கி l - ** ! R

கழுத்து மணிகளின் ஓயாத கிண்கிணி, நேற்றிரவு வயலில் மடக்கிய ஆட்டு மந்தை திரும்புகிறது.

வயல் நடுவில் தகரக் கொட்டகை மேல் கல்லெறி சத்தம். ஆடு மேய்க்கும் பையனின் சேஷ்டை. வேகும். பினத்துக்குத் துக்கிப் போடுகிறதோ என்னவோ ? சாகும். சமயத்தில் கூட பிராணன் போகிறது.

மோகாம்பரி மலையில் குமுறல்

இடியா ே

கிணறு தோண்டப்பாறை வெடியா ?

காடை கவுதாரியைத் துப்பாக்கிச் சுடலா ?

“கீச் கீச்” (எனுமாம்) பச்சைக்கிளி

ரொய்ஞ்ஞ்ஞ்”

பொன்வண்டு

இல்லை கருவண்டு

இல்லை குளவி

இல்லை தேனி

இல்லை க்ரஹங்கள் அந்தரத்தில் ஒன்றையொன்று இழுத்துப் பிடிக்கும் விண் விண் கிண் கிண். ஓயாத தந்தி தொம் தோம் திந்தி திம்திம். ஓயாத புவன கீதம்.

இல்லை. பூமியை ஆகாயத்துடன் பிணைக்கும் காற் றின் நாண் ஒலி -

இல்லை. தனிமையின் ஏக்கத்வனி.

இல்லை- இல்லை இல்லை இல்லை என்று மறுப்பின் உயிரோடு சட்டையுரிப்பு. -

“கீச் கீச் கீச் கீச் கீச்- குரங்கின் அலறல் ஏன்?