பக்கம்:கழுதை அழுத கதை.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ののの2多 学g22う のの2多

பெண்கழுதை கேட்கின்றேன்;

பேசட்டும் மக்களென்பார்! உண்கவளத் திற்காக

உள்ளத்தை விற்கின்ற மக்களையே கண்டிருப்பேன்!

மாண்புள்ளம் கொண்டுயர்ந்த தக்கார் ஒருவரை, என்

தாழ்வான வாழ்க்கையிலே 1260 கண்களிலும் கண்டதில்லை!

காதாலும் கேட்டதில்லை!

பெண்களைப் பற்றியவர்

பேசுவதைக் கேட்டாலோ,

தெய்வப் பொலிவிருக்கும்;

தீதுகளை ஆய்ந்தாலோ,

பொய்வடிவம் பட்டுவிடும்;

போலிவுரு வாகிவிடும்!

"முன்னோர்கள் சொல்லிவைத்த

மூதுரைகள் பொய்யென்பீர்! f265 பின்னோர்கள் உங்களுரை

பிழைசொல்ல மாட்டாரோ? இப்படியே முன்பின்

இழுபறியாய் வாழ்வதல்லால் ஒப்பி, நிகழ் காலத்தில்

ஒன்றாய்-உருப்படியாயதப்பேதும் இன்றித்

தனிச்சிறப்பாய் வாழ்வதெக்கால்?

126

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/167&oldid=666380" இலிருந்து மீள்விக்கப்பட்டது