பக்கம்:கவிகளின் காட்சி.pdf/1

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கவிகளின் காட்சி. முதல் அதிகாரம். caen தாய் மொழி. உலகம் தெரிகிறது; உயிரினங்கள் தெரிகின்றன; ஓரளவு தெரிந்தாலும் யாவும் அளவிடலரிய நிலையில் நீண்டு பரந்து யாண்டும் நெடிது விரிந்துள்ளன. சீவகோடிகளுள் மனித இனம் அறிவு மிக உடையது; எதையும் கருதியுணர வுரியது; உணர்ந்ததைத் துணிந்து செய்ய வல்லது. தன் கண் கண்ட மண் கண்டம் முழுவதும் பரவி உறவுரிமையோடு கூட்டம் கூட்டமாய்க் குழுமி வாழ்கின்றது. கடல்களையும் மலைகளையும் கடந்து எங்கும் அடல் மிகுந்து சென்று எவ் வழியும் செவ்வையாய் வாழ மனித மரபு தெரிந்து கொண் டது போல் வேறு எந்த மரபும் தெரிந்து கொள்ள வில்லை. பேசத் தெரிந்தது. உறவாய்க் கூடி வாழும் இயல்பினை யுடையது ஆதலால் தன் உள்ளம் கருதியதை அயலே சொல்ல நேர்ந்தது. அவ் வாறு சொல்லத் தொடங்கிய போது தான் மனிதன் மெல்ல , உயர நேர்ந்தான். பேச்சு வழியே பெருமை ள் வந்தன. ஆதியில் மனிதன் பேசவில்லை; தான் விரும்பியதைக் லகச் சாடைகளாலேயே காட்டி வந்தான்; இந்த அடை