பக்கம்:கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கவிக்குயில் சரோஜினியின்
நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்


1. பிரிட்டிஷ் மந்திரிக்குப் பதில்
கோமகன் மன்னிப்புக் கேட்டார்!

உலக நாடுகளில் பலவிதமான ஆட்சிகள் நடந்தன; நடைபெறுகின்றன. அவை எவை? எந்த ஆட்சிக்காகக் கவிக்குயில் சரோஜினி இங்கிலாந்து நாட்டிலே போராடினார் என்பதை பார்ப்போம்.

★ ஆள்பவர் இல்லாமல் நடக்கும் ஆட்சி; அதாவது அதற்கு அராஜக ஆட்சி Anarchy; என்று பெயர்!

★ 'உயர்குடி மக்கள் ஆட்சி' Aristocracy; என்ற ஓர் ஆட்சி உண்டு!

★ ஏக ஆட்சி அதாவது தன்னாட்சி Autarchy என்ற பெயருடைய ஆட்சி ஒன்று இருந்தது!

★ ஏகாதிபத்தியம் ஆட்சி, அல்லது தன்னரசு என்ற பெயரில் Autocracy ஒன்று நடந்தது.

★ குடியாட்சி அல்லது ஜனநாயக ஆட்சி Democracy என்ற ஆட்சியில் நாம் இன்று வாழ்கின்றோம்.

★ இரட்டை ஆட்சி என்ற பெயரில் கி.பி. 1921-ம் ஆண்டு இந்தியாவில் Dyarchy நடைபெற்றது.

★ சர்வாதிகாரம் என்ற பெயரில் Dictatorship ஆட்சிகள் நடந்ததை நாம் வரலாற்றில் படிக்கின்றோம்!

★ Dyarchy என்ற இரு வகை ஆட்சி கிரேக்க நாட்டில் நடந்துள்ளதாகச் சரித்திரம் கூறுகின்றது.