பக்கம்:கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் 75

தேவியாரை அழைத்துச் செல்வதே எங்கள் வருகையின் நோக்கம்.

தேவியாரின் திருவுருவப் படம் ஒன்றை நேற்று நான் மகாசபைக்கு பரிசாக வழங்கினேன், அழகான அந்தப் படத்தை வைத்துக் கொள்ளுங்கள், தேவியாரை மட்டும் எங்களோடு தென்னாப்பிரிக்காவுக்கு அழைத்துச் செல்லுகிறோம்! என்று அவர் பேசினார்.

இந்த உரை ஒன்றே போதும் அல்லவா தேவியார் தென்னாப்பிரிக்காவில் எவ்வளவு கடுமையாக இந்தியர்கள் உரிமைக்கு போராடினார் என்பதை இந்தியா உணர்ந்திட!

பெல்காம் காங்கிரஸ் மகாசபை, சரோஜினி நாயுடு தென்னாப்பிரிக்காவிலும், அமெரிக்காவிலும் ஆற்றிய அரிய பணிகளைப் பாராட்டி தீர்மானம் நிறைவேற்றி மகிழ்ச்சி கொண்டது.

காங்கிரஸ் மகாசபை மாநாடு முடிந்ததும், சரோஜினி தேவியார் மீண்டும் வழக்கம் போல, தென்னிந்தியாவிலும், இலங்கையிலும் சுற்றுப்பயணம் செய்து காங்கிரஸ் மாநாட்டுக் கருத்துக்களைப் பேசி, இளைஞர்களை வீறு கொள்ளச் செய்தார்! மக்களும் மகிழ்ச்சியடைந்தார்கள்.


13. கான்பூர் காங்கிரஸ் சரோஜினிதேவி தலைவர்

சரோஜினிதேவி காங்கிரஸ் மகாசபை பிரச்சாரத்துக்காக அவர் செல்லாத இடமில்லை; அவர் பேசாத அயல் நாட்டுக் கூட்டங்கள் இல்லை; அவரைப் பாராட்டாத தலைவர் இல்லை; என்ற அளவில், அவர் பல ஆண்டுகளாக உலகத்தைச் சுற்றிச் சுற்றிப் பிரசாரம் செய்தார்.