பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

! {}6 கவிஞன் உள்ளம் ஏனேயோர் மனதைப்போல் அவர் மனது எளிதில் இளகாது என்பதுதான் பொருள். அதுபோலவே, வயிரக்கல்லைப்போல் தாடகையின் நெஞ்சு கெட்டியாக இருக்கும் என்பது பொருள் அன்று. பொதுவான கல்லேவிட வயிரக்கல் கெட்டியாக இருப்பதைப்போல ஏனைய அரக்கர் உள்ளத்தைக் காட்டிலும் அவள் உள்ளம் கெட்டியானது என்பதே அதன்கிருத்து. அல் ஒக்கும் நிறம் ; கல் ஒக்கும் நெஞ்சு” எப் படிப்பட்ட பொருத்தமான உவமைகள் புறமும் அகமும் புலன் அறியும்படி தெரியவைக்கிருர் படிக் கும்போதே உள்ளக்கிளர்ச்சி ஏற்படுகிறது. இத்தகைய அவளது கொடிய மார்பை இராகவ னம்பு எவ்வாறு துளைத்தது? இத்தகைய கேள்வி எழுதல் இயற்கை. இதற்குப் பதில் சொல்வதைப் போல் கம்பரது வாக்கு அமைந்திருக்கிறது. கல்வியறிவில்லாத மூடர்களுக்குக் கல்வியறி வுடைய கல்லோர்கள் நல்லுரை கூறினல் அதை அவர் கள் பிரியமாகக் கேட்டு உணரமாட்டார்கள். ஒரு காதில் வாங்கி இன்ஞ்ெரு காதில் விட்டு விடுவார்கள். அதுபோலவே இராமன் விட்ட அம்பு தாடகையின் கெஞ்சில் பாய்ந்து விரைவாகி ஊடுருவிப் போய்விடு கிறது. கல்லுரைகள் காதில் பட்டு நெஞ்சில் பதியாது விரைவாய் வெளியில் போய்விடுதல் போலவே, அம்பும் கெஞ்சில் பாய்ந்து சற்றும் தங்காது போய்விடுகிறது. ' கல்லாத புல்லர்க்கு கல்லோர் சொன்ன பொருள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/124&oldid=781537" இலிருந்து மீள்விக்கப்பட்டது