பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 கவிஞன் உள்ளம் களவுத்துறையில் வரும் தலைவன் ஒருவன் ஊழ் கூட்டுவிக்கத் தனது அறிவிக்கும் ஏனைய கலன்கட்கும் பொருத்தமான தலைவி ஒருத்தியை எய்தப் பெறுகின் முன். இயற்கைப் புணர்ச்சி நடைபெறுகின்றது. பின்னர் முறையாகப் பாங்கன், பாங்கி முதலிய வாயில் களால் தலைவியைப் பலமுறை சந்திக்க வாய்ப்புக் கிடைக்கிறது; இணைவிழைச்சால் இன்பம் அடைகிருன். ஒரு சமயம் தான் அடைந்த இன்பம் எவ்வாறு இருந்தது என்பதைத் தனக்குத் தானே சொல்லிக் கொள்கிருன். இவ்வின்பம் தலைவியும் எய்தப் பெற்ரு லும் அவளிடம் குறிப்பால் நிகழுமேயன்றி, கூற்ருல் நிகழாதாகையால், அதனேப் பாவலர் காட்டவில்லை. கடலில் செல்லுபவர்கள் வானம் ைேரத் தொட்டுக்கொண்டிருப்பதைப் பார்த்திருக்கலாம். உண் மையாக வானம் ைேரத் தொடவில்லை யென்பதை நெடுந்தொலைவு செல்பவர்கள் அறிவார்கள். அது போலவே பரந்த நூல்களைப் படித்தவர்கள் அறிவிற் கும் எல்லேயில்லை என்பதை உணர்வார்கள். மேலும் படிக்கப் படிக்க படிப்போரது அறியாமை வெளிப் பட்டுக்கொண்டே யிருக்கும். நமக்குத் தெரியாத பொருள்கள் இன்னும் எவ்விளவு இருக்கின்றனவோ?’ என்ற வியப்பும் திகைப்பும் ஏற்படும். இயற்கைப்புணர்ச்சியின்போது தலைவன் இணை விழைச்சால் முழு இன்பத்தை அடைந்தாலும், பிறகு அடையும் இன்பம் அவனுக்குப் புதிதாகத் தோன்று கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/94&oldid=781784" இலிருந்து மீள்விக்கப்பட்டது