இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தத்துவத்தை வைத்து உங்களை உருட்டிவிட்ட பின், என்னிடமிருந்து பிறக்கும் இவ்வினா உங்களுக்கு இதமாக இருக்குமே!...
காதலுக்கா விளக்கம் சொல்லத் தெரியாது உங்களுக்கு?...
‘கடவுளைப் போலவே காதலும் கண்ணுக்குத் தெரியாது; எல்லாம் வல்லசக்தி கொண்டது; எங்கும் வியாபித்தது. எல்லாம் உணர்ந்தது!’
என்னுடைய ‘இரண்டாவது கண்ணகி’யில் நான் கூறிய முடிவு இது
இதைக்கூட அண்மைப் படமொன்றில் கேட்கும் வாய்ப்புக் கிட்டிற்று.
வாழ்க, அவ்வசனத் தயாரிப்பாளர்!
சரி:
காதலைப் பார்ப்பதற்கு முன்னம், காதலர்களை பார்ப்போமா?
ஆண்:பொன்னென்பேன்-சிறு
- பூவென்பேன்-காணும்
- கண்ணென்பேன்-வேறு
- என்னென்பேன்?
36