இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
உயிர் காத்த கோவூர்கிழார்
27
களைந்து எறிவதுதான் நல்லது” என்று கிள்ளிவளவன் சொன்னான்.
அந்தச் சின்னஞ் சிறு பாலகர்களை எப்படியோ பற்றிக் கொண்டுவந்து விட்டார்கள் முரடர்கள். கிள்ளிவளவனிடம் பரிசுபெறச் செய்த வேலை!
“அக்குழந்தைகள் இருவரையும் யானைக்காலில் இடறி விடுங்கள்!”' என்று உத்தரவிட்டான் கொடுமணம் படைத்த கிள்ளிவளவன்.
இந்தச் செய்தி எப்படியோ நாட்டுமக்களுக்குத் தெரிந்து விட்டது. காரியினிடம் யாவருக்கும் அன்பு இருந்தது. இளங்