சித்தலச் சாத்தனர் 57
சுவையற்ற கவிதைகளேயும் கண்டால் அவருக்குப் பிடிப்பதில்லை. கவி பாடியவர்களேக் கண்டு பிடித்து வைய முடியுமா? இந்தக் கவியைப் படிக்கும்படி நேர்ந்ததே என்று தம் தலையில் குட்டிக் கொள்வார். ஒரு சமயம் ஏதோ ஒரு நூலேப் படித்தார். அது மட்டமான கவிகள் அடங்கியது.
அதைப் படிக்கவே சகிக்கவில்லை. வழக்கம் போலத் தலையிலே குட்டிக் கொள்ளப் போனர். அப்போது அவர் கையில் எழுத் தாணி இருந்தது. அந்த கினேவே இல்லாமல் அவர் குட்டிக் கொண்டபோது எழுத்தாணி தலையில் குத்திவிட்டது. ஆழமாகக் குத்தி ரத்தம் பிரிட்டது. புண் உண்டாயிற்று. பிறகு அது சீழ்ப் பிடித்து ஆறுவதற்குப் பல நாட்கள் ஆயின. -
அவர் தலையில் கட்டு கட்டிக்கொண் டிருந்ததைக் கண்ட நண்பர்கள், என்ன புலவரே, கட்டு?' என்று கேட்டார்கள்.
'புண், சீழ் கட்டியிருக்கிறது.' "என்ன புண்?” -
சுவையற்ற கவிதையைக் கண்டு, குத்திக் கொண்டதல்ை வந்த வினே!" -
"ஐயோ. பாவம்! நீங்கள் சித்தலைச் சாத்தனர் ஆனது தெரிந்தால், மட்டமான கவிகளை இனிமேல் யாரும் எழுத மாட் டார்கள். எழுதிலுைம் உங்களிடம் காட்டமாட்டார்கள்" என்று அவர்கள் சொன்னர்கன். - . . .
அது முதல் அவரைச் சீத்தலைச் சாத்தனர் என்றே யாவரும் அழைக்கத் தொடங்கினர்கள். - -- -
முற்றும்